2023 ஆம் ஆண்டு நடைபெறும் சனி பெயர்ச்சியால் இந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும்.
ஜோதிட ரீதியாக கிரகங்களில் மிகவும் மெதுவாக நகர்ந்து செல்லும் கிரகம் சனி ஆகும். இதன் காரணமாக ஒருவருடைய ராசியில் சனி பகவான் பெயர்ச்சியாக சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். இந்த பெயர்ச்சியின் போது சில ராசிகளுக்கு நன்மைகளை வழங்குவார், சில ராசிகளுக்கு தீமையை வழங்குவார். அந்த வகையில் வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் மீண்டும் சனி பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இந்த பெயர்ச்சியின் போது சில ராசிகளுக்கு மிகவும் சிக்கலான பெயர்ச்சியாக இந்த சனி பெயர்ச்சி இருக்க போகிறது.. அந்த ராசிக்காரர்கள் யார் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
2023 சனிப்பெயர்ச்சி பலன்கள்
கடகம் – Sani Peyarchi 2023 Kadagam:
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் போது சனிபகவான் 8-ஆம் வீட்டிற்கு பயணம் செய்ய போகிறார். ஆக இது உங்களுக்கு அஷ்டமத்து சனி காலம் ஆகும். இதனால் உங்களை சனி பகவான் மிகவும் ஆட்டி படைக்க உள்ளார். குறிப்பாக 8-ஆம் வீட்டில் பயணம் செய்யும் போது ராஜயோகத்தையும், 8-ஆம் வீட்டில் அமரும் போது சில துன்பங்களையும் தருவார். நீங்கள் பணிபுரியும் இடத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே நல்ல பலன்கள் பெற முடியும். மற்றவர்களுக்கு கடனாக கொடுக்கும் பணத்தை திரும்ப பெறுவதில் அதிக தாமதம் ஏற்படும். இந்த பெயர்ச்சியால் கணவன் மனைவி உறவுக்குள் அடிக்கடி சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இன்றைய ராசி பலன்..!
சிம்மம் – Sani Peyarchi 2023 Simmam:
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் போது 7-ஆம் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். ஆக இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் திருமணம் வாழ்க்கையில் சில சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. காதல் செய்யும் நபர்களாக இருந்தால் உங்கள் உறவில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இந்த காலங்களில் நீங்கள் உங்கள் துணைவியின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்றால் உங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுடன் எந்த ஒரு பிரச்சனையும் செய்யாமல் இருப்பது நல்லது.
விருச்சிகம் – Sani Peyarchi 2023 Viruchigam:
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இந்த பெயர்ச்சியின் போது 3-ஆம் மற்றும் 4-ஆம் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்கள் வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். ஆக வீட்டில் உள்ளவர்களுடன் ஒற்றுமையாக இருப்பது நல்லது. உங்கள் தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வீட்டில் திருட்டு போக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் இந்த காலத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நாளைய ராசி பலன்
மீனம் – Sani Peyarchi 2023 Meenam in Tamil:
இந்த பெயர்ச்சியின் போது சனி பகவான் மீனம் ராசிக்காரர்களுக்கு 11-ஆம் மற்றும் 12-ஆம் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். ஆக இந்த பெயர்ச்சி உங்களுக்கு வீண் செலவுகள் மற்றும் விரயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. வழக்கு சார்ந்த விஷயங்களில் இந்த நேரம் உங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்காது. குறிப்பாக இந்த கால கட்டத்தில் உங்களுக்கு அதிக பணம் பற்றாக்குறை ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் வரும். அரசு பணியாளராக தயாராகும் நபர்களுக்கு இந்த காலம் மிகவும் சவாலான காலமாக இருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |