ஏப்ரல் 22-ஆம் தேதி குருபெயர்ச்சி காரணமாக ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் இவங்க தானா..!

Advertisement

குரு பெயர்ச்சி பலன் 2023

ஆன்மீகத்தை குருபெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சி ஆனது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் இத்தகைய இரண்டு பெயர்ச்சியின் பலன் ஆனது ஜோதிடத்தின்படி எந்த ராசிகளுக்கு எந்த மாதிரியான பலன்களை அளிக்கப்போகிறது என்று தெரியும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான குருபெயர்ச்சி ஆனது ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நிகழவிருக்கிறது. இத்தகைய பெயர்ச்சி காரணமாக காலச்சக்கரத்தில் உள்ள 12 ராசிகளில் சில ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்ட மழை கிடைக்க போவதாக கூறப்படுகிறது. இத்தகைய அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யாரென்றும் மற்றும் அதில் உங்களுடைய ராசி இருக்கிறதா என்றும் தெரிந்துக்கொள்ள பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளப் போகிறோம். மிஸ் பண்ணிடாதீங்க இன்னும் குருபெயர்ச்சிக்கு 2 நாட்கள் தான் இருக்கிறது வாங்க எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

புதனின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்ளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது…இதுல உங்க ராசி இருக்கா…

Guru Peyarchi Palangal 2023:

2023-ஆம் ஆண்டிற்கான குரு பெயர்ச்சியால் குரு பகவான் மீன ராசியில் இருந்து ராசியில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழைகிறார். இத்தகைய பெயர்ச்சியின் காரணமாக 8 ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தினை அள்ளித்தரப்போவதாகவும் மற்றும் ஜாக்பாட் அடிக்கப்போவதாகவும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

ரிஷிப ராசி:

ரிஷபம்

 

 

12 ராசிகளில் 2-வது ராசி என்றால் அது ரிஷிப ராசி தான்.  இத்தகைய ரிஷிப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காரணமாக இனிவரும் காலமானது மிகவும் சிறப்புமிக்க ஒரு காலமாக அமையப்போகிறது.

அதுமட்டும் இல்லாமல் இனி நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி கிடைத்து நல்ல நிலைக்கு வாழ்க்கையில் முன்னேறி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி 2023 சிம்மம்:

சிம்மம்

 

காலசக்கரத்தில் சிம்ம போன்ற அமைப்பினை கொண்டது தான் சிம்ம ராசி. இத்தகைய சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடத்திற்கான குரு பெயர்ச்சி பலன் ஆனது வெற்றிகரமான பலனாக இருக்கிறது.

மேலும் இந்த பலன் காரணமாக தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

தனுசு ராசி:

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பலன் ஆனது சாதகமான ஒரு பலனை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. மேலும் இனி வரும் காலங்களில் பணம், புகழ் மற்றும் உயர்வு என அனைத்தும் கிடைத்து மகிழ்ச்சியாக வாழலாம் என்று கூறப்படுகிறது.

கடக ராசி:

கடகம்

ராசியில் 4-வதாக உள்ள கடக ராசிக்காரர்களுக்கு இத்தகைய நேரம் ஆனது விரும்பத்தக்க கூடிய ஒரு நேரமாக இருந்தாலும் கூட எந்த செயலிலும் பொறுமை மற்றும் நிதானம் என்பது மிகவும் முக்கியம் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

மேலும் உங்களுடைய விடா முயற்சியின் காரணமாக நீங்கள் செய்யும் செயலில் வெற்றி பெரும் வாய்ப்பும் உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த 5 ராசிக்காரர்கள் தான் மிகவும் தைரியசாலியாம்..  இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க.. 

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2023:

கன்னி

காலச்சக்கரத்தில் இரண்டு பெண்களை அடையாளமாக கொண்டது தான் கன்னி ராசி. 2023-ஆம் ஆண்டிற்கான குரு பெயர்ச்சி காரணமாக கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும்.

மேலும் இதுநாள் வரையிலும் இருந்த பணவரவினை விட இப்போது அதிகரித்து காணப்படும்.

மேஷ ராசி:

மேஷம்

குரு பகவான் மீனா ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்வதால் மேஷராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இது வரையிலும் திருமணம் ஆகாத மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது விரைவில் திருமணம் ஆகிவிடும்.

விருச்சிக ராசி:

விருச்சிகம்

இந்த குரு பெயர்ச்சி காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் எடுக்கும் புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

குரு பெயர்ச்சி 2023 மிதுனம் ராசி:

மிதுனம்

ராசியில் மூன்றாவது ராசி என்றால் அது மிதுன ராசி தான். இந்த குருபெயர்ச்சி காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரையிலும் நிதிநிலை ரீதியாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முன்னேற்றம் நிறைந்த காலமாக காணப்படும்.

மேலும் தொழில் ரீதியாக உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement