2024-ன் குருவின் யோகம்
பொதுவாக அனைவருக்கும் ஜாதகம் என்பது இருக்கும். அதில் இருக்கும் கிரகங்கள் மாற்றத்தை பொறுத்து தான் வாழ்க்கையில் நன்மை தீமைகள் அவர்களின் கிரகணங்கள் மாற்றத்தை பொறுத்து அமையும்அதனால் ஏதாவது ஒன்றை புதிதாக செய்ய போகிறோம் என்றால் உடனே நம்முடைய ஜாதகத்தை பார்த்து அதில் கிரகங்களில் மாற்றத்தை அறிந்து அது அவர்களுக்கு சாதகமாக உள்ளதாக என்பதை பொறுத்து தான் அந்த புதிய வேலையை செய்வார்கள். அப்போது தான் அது நன்றாக நடக்கும்.
அந்த நிலையில் தற்போது அதிஷ்டங்களின் கிரகணமான வியாழன் வரும் ஆண்டின் தொடக்கத்திலில் சில ராசிகளில் பயணிக்கப்போகிறார். அப்படி குருபகவான் இடம்பெயரும் 4 ராசிகள் ஏறுமுகத்துடன் காணப்படும். அந்த 4 ராசிகள் என்ன அவற்றின் பலன்கள் என்ன என்பதனை இந்த பதிவின் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
2024-ன் குருவின் யோகம் பெரும் ராசிகள்:
கும்பம்:
கும்ப ராசிக்கு 2024 நல்ல தொடக்கமாக அமையும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வுக்கு போட்டி போடலாம். இந்த வருடம் உங்களுக்கான வருடம். பணிபுரியும் இடத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். முக்கியமாக உயர் அதிகாரியின் பாராட்டையும் ஆதரவையும் தக்கவைத்து கொள்வார்கள். ஏனென்றால், கும்ப ராசியின் முதலாம் வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் உங்களின் அனைத்து செயல்களும் சிறப்பாக முடியும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களுக்கு 2024-ல் தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். அதேபோல் அடுத்த வருடம் வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது படுவதால், பணிபுரிபவர்களுக்கு வேலையில் உயர் பதவிகள், சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் அலுவலகத்தை பொறுத்த வரையில் அனைவரையும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். அதேபோல் குருவின் மாற்றத்தால் அதிக உழைப்பிற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்:
இந்த வருடம் கடக்க ராசிக்காரர்கள் தொழில் முறையில் வெற்றியடைந்தவராக இருப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிலை உயரும். பொருளாதார நிலை சீரடையும். குரு பகவானின் அருளால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
மேலும் இந்த காலகட்டத்தில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது, இந்த பயணங்களால் அனுகூலமான நற்பலன்கள் கிடைக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம்.
சிம்மம்:
பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தற்போது குரு பகவான் உங்கள் ராசியில் உதயமாகி இருப்பதால், தொழிலை பொறுத்த வரையில் வெற்றியையும் லாபத்தை பெறுவீர்கள். அதேபோல் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதனால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். சமூகத்தில் அங்கீகாரம், பதவி உயர்வு மற்றும் தொழில் வளர்ச்சி சாத்தியமாகும்.
2024-ல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் நீங்களா..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |