2024-ல் ரிஷபத்தில் நுழையும் குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அமோகமான வாழ்க்கை தான்..!

Advertisement

2024 Gurupeyarchi Palangal

ஜோதிடத்தை பொறுத்தவரை அனைவர்க்கும் ஒரே மாதிரியான பலன்கள் அமையும் என்று நாம் கூறவே முடியாது. ஏனென்றால் ஆன்மீகத்தில் மொத்தமாக 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் இருக்கிறது. ஆகையால் இதில் அமையும் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு ஏற்றவாறே பலன்கள் அனைத்தும் அமைகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ராசியினரும் கிரங்களின் மாற்றத்தினால் அமையும் பலன்கள் நம்முடைய வாழ்க்கைக்கு எந்த மாதிரியான பலன்களை அளிக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்கள். அவ்வாறு பார்க்கையில் சனி மற்றும் குரு பெயர்ச்சியின் மூலமாக நமது வாழ்க்கையில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருப்பார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் வருகின்ற 2024-ஆம் ஆண்டு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். ஆகையால் இத்தகைய பெயர்ச்சியினால் என்ன மாதிரியான பலன்கள் எந்த ராசியினருக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க..!

சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள் 

குரு பெயர்ச்சி பலன்கள் 2024:

ரிஷப ராசி:

ரிஷபம்

மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்குள் நுழைவதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும் விதமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி அளிக்கும் விதமாக இறுதியில் முடியும். மேலும் கடின உழைப்பிற்கு ஏற்ற மாதிரியான பண வரவு மற்றும் பலன்கள் கிடைக்கும்.

அதேபோல் உடல்நலத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். மேலும் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.

கடக ராசி:

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலமானது மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக சிறப்பானதாக அமையும். இது நாள் வரையிலும் தடையில் இருந்த காரியங்கள் அனைத்தும் நீங்கி வெற்றி உண்டாகும். மேலும் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பானம் பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். அதே சமயம் லாபமும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

மிதுன ராசி:

மிதுன ராசி2024-ஆம் ஆண்டில் நடைபெறும் குருவின் பெயர்ச்சி மிதுன ராசிக்கார்களுக்கு பொருளாதார நிலையை மேம்படச் செய்கிறது. மேலும் உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை ஆனது சிறப்பினதாக காணப்படும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அமோகமான பலன்களை பெறுவீர்கள்.

 

சனி பெயர்ச்சியின் நேரடி சஞ்சாரம்: தீபாவளிக்கு முன் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement