21 Leaves for Ganesh Pooja in Tamil Language
முழு முதற்கடவுளாய், அனைவரின் இன்னல்களையும் தீர்த்து, எல்லோருக்கும் நன்மை அளிப்பவனாய் இருப்பவனே விநாயகப் பெருமான். அதனால் தான் நாம் எந்த செயல் செய்தாலும் முதலில் விநாயக பெருமானை வழிபட்ட பிறகு தான் ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் நாம் ஆரம்பிக்கும் செயலானது எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக வணங்குவார்கள்.
கடவுளை வணங்கும் போது கடவுளுக்குரிய பிரசாதம் மற்றும் பூஜை பொருட்களை வைத்து வழிபடுவார்கள். அதோடு மட்டுமில்லாமல் விநாயகருக்கு அருக புல் வைத்து வழிபட்டால் வேண்டிய வரம் கொடுப்பார் என்று அனைவரும் அறிந்தது. இது இல்லாமல் இன்னும் நிறைய இலைகளை வைத்து வழிபடலாம். அவை என்னென்ன இலைகள் என்று இந்த முழுமையாக படித்து அறிந்து கொள்ளவும்.
முல்லை இலை:
விநாயகருக்கு முல்லை இலையை வைத்து வழிபட்டால் நம் வீட்டில் உள்ள அறம் வளரும். மேலும் நம் வீட்டிலுள்ள கர்மா வினைகள் நீங்கும்.
கரிசலாங்கண்ணி இலை:
கரிசலாங்கண்ணி இலையை வைத்து வழிபடுவதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உறுதுணையாக இருப்பார். மேலும் நம் வாழ்க்கைக்கு தேவையான பொன்னும், பொருளும் வந்த சேரும்.
வில்வ இலை:
வில்வ இலை சிவபெருமானுக்கு மட்டுமில்லை, விநாயகருக்கு, ஏற்ற இலையாக இருக்கிறது. இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அருகம் புல்:
அருக புல்லை வைத்து வழிபடுவதால் உங்களின் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
இலந்தை இலை:
இலந்தை இலையை வைத்து விநாயகருக்கு வழிபடுவதால் கல்வியில் உங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஊமத்தை இலை:
வன்னி இலை:
ஊனங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.
நாயுருவி இலை:
உடலானது பலமாக இருக்கும். மேலும் முகம் மற்றும் மனதில் பொலிவு தன்மை அதிகரித்து அழகு அதிகரிக்கும்.
அரளி இலை:
உங்களின் வாழ்க்கையில் தடைகள் நீங்கி வாழ்க்கையில் எடுத்த காரியமெல்லாம் வெற்றியில் வந்து முடியும்.
எருக்கம் இலை மற்றும் மருத இலை:
எருக்கம் இலையை வைத்து வழிபடுவதால் பெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் இருந்தால் அவை நீங்கும். மேலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
விஷ்ணுகிராந்தி இலை:
உங்களுடைய நுஉணர்வி தன்மை அதிகரிக்கும்.
மாதுளை இலை:
சமூகத்தில் நல்ல கிடைப்பதற்கு இந்த இலை உதவி செய்கிறது.
தேவதாரு இலை:
நெனெகல் கஷ்டங்களை எதிர்கொள்வதற்கான தைரியத்தை கொடுக்கும்.
மரிக்கொழுந்து இலை:
குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
அரச இலை:
அரச இலையை வைத்து வழிபடுவதால் வேலை செய்யும் இடத்தில் உயர் பதவி கிடைக்கும்.
ஜாதிமல்லி இலை:
வீடு, மனை போன்றவை வாங்குவதற்கு இந்த இலையை வைத்து வழிபடலாம்.
தாழம்பூ இலை:
விநாயகருக்கு தாழம்பூ இலை வைத்து வழிபடுவதன் மூலம் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.
அகத்தி இலை:
நீங்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு அகத்தி இலையை வைத்து விநாயகரை வழிபடலாம்.
தவனம் இலை:
தவன இலையை வைத்து வழிபடுவதன் மூலம் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |