27 நட்சத்திரங்களும் அவற்றை ஆளும் கிரகங்களும்..!

Advertisement

27 Nakshatras and Ruling Planets in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் ஆன்மீக பதிவில் 27 நட்சத்திரங்களும் அவற்றை ஆளும் கிரகங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக, ஆன்மீகத்தில் மொத்தம் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவற்றை ஆளும் 9 நவகிரகங்களும் உள்ளது. இதன் நிலைகளை பொறுத்தே ஒரு மனிதனின் வாழ்க்கை முறை அமைகிறது.

இவ்வாறு நம் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கும் இந்த 9 நவகிரகங்கள், 27 நட்சத்திரங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், ஒவ்வொரு கிரகமும் 3 நட்சத்திரங்களுக்கு அதிபதியாக திகழும். எனவே அந்த வகையில் இப்பதிவில் 27 நட்சத்திரங்களும் அவற்றை ஆளும் கிரகங்களும் பற்றி தெரிந்துகொண்டு, உங்களுடைய அதிபதி கிரகத்தினை வழிபடுங்கள்.

27 நட்சத்திரங்களும் அவற்றை ஆளும் கிரகங்களும்:

வ.எண்  நட்சத்திரம்  ஆளும் கிரகம் 
1 அசுவினி கேது
2 பரணி சுக்கிரன்
3 கிருத்திகை சூரியன்
4 ரோகிணி சந்திரன்
5 மிருகசீரிடம் செவ்வாய்
6 திருவாதிரை  இராகு
7 புனர்பூசம்   குரு (வியாழன்)
8 பூசம்   சனி
9 ஆயில்யம்   புதன்
10 மகம்   கேது
11 பூரம்   சுக்கிரன்
12 உத்திரம்   சூரியன்
13 அஸ்தம்  சந்திரன்
14 சித்திரை  செவ்வாய்
15 சுவாதி  இராகு
16 விசாகம்  குரு (வியாழன்)
17 அனுஷம்  சனி
18 கேட்டை   புதன்
19 மூலம்  கேது
20 பூராடம்  சுக்கிரன்
21 உத்திராடம்  சூரியன்
22 திருவோணம் சந்திரன்
23 அவிட்டம்  செவ்வாய்
24 சதயம்  இராகு
25 பூரட்டாதி  குரு (வியாழன்)
26 உத்திரட்டாதி சனி
27 ரேவதி  புதன்

27 நட்சத்திர பழங்கள் பட்டியல்..!

Planets and Their God Names in Tamil:

27 நட்சத்திரங்களுக்கு அதிபதி கிரகம் இருப்பதைப்போல், அந்த ஒன்பது நவகிரகங்களுக்கும் அதிதேவதை உள்ளது. அவை பின்வருமாறு:

வ. எண்  கிரகம்  அதிதேவதை 
1 சூரியன் சிவபெருமான்
2 சந்திரன்  பார்வதி தேவி
3 செவ்வாய் முருகப் பெருமான்
4 புதன் பகவான் விஷ்ணு
5 வியாழன் (குரு) பிரம்மா, தட்சிணாமூர்த்தி
6 வெள்ளி தேவி மஹாலக்ஷ்மி
7 சனி  ஹனுமான், அய்யப்பன்
8 ராகு துர்கா தேவி
9 கேது கணபதி 

27 நட்சத்திர மரங்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement