27 நட்சத்திர விநாயகர்
மனிதன் பிறக்கும் போதே 27 நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் ஆதிக்கத்தின் மூலம் பிறக்கிறான். ஒவ்வொரு ராசிகளுக்கும் 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. அதில் ஏதாவது ஒரு நட்சத்திரம் மட்டும் தான் நமக்கு இருக்கும். அது போல ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு காணப்படும்.
அதாவது உரிய நிறம், தெய்வம், மரங்கள் என்று காணப்படும். அதனை பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். ஒவ்வொரு நடச்த்திரங்களுக்கும் உரியவற்றிற்கு ஏற்றது போல நாம் வணங்கினால் அதற்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் 27 நட்சத்திர காரர்களும் செல்ல வேண்டிய விநாயக கோவிலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.
27 நட்சத்திர விநாயகர்:
மூலவர் | நட்சத்திர விநாயகர் |
உற்சவர் | விநாயகர் |
தல விருட்சம் | 27 நட்சத்திரம் மற்றும் 12 ராசி விருட்சங்கள் அமைந்துள்ளது |
ஊர் | கூழ்மந்தல் ஏரிக்கரை |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மாநிலம் | தமிழ்நாடு |
நடை திறக்கும் நேரம்:
காலை 08.00 AM மணி முதல் 12.00 PM மணி வரை
மாலை 04.00 PM மணி முதல் 07.00 PM மணி வரை
கோவில் முகவரி:
அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில், கூழ்மந்தல் ஏரிக்கரை,செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்-631701
அதிதேவதைகள்:
உலகில் வேறு எங்கும் காணாத ஜென்ம நடச்த்திரத்திற்கே உரிய அதிதேவதைகள் நிறைந்துள்ள தலமாக விளங்குகிறது.
ஜென்ம நட்சத்திரத்தில் அதிதேவதைகளுக்கு அபிஷேகம் செய்வார்கள். விருட்சங்களுக்கு பூஜை செய்த கலச நீரை மூன்று முறை விருட்சத்தினை சுற்றி வந்து அதன் வேர் பகுதியில் ஊற்றுவது நல்லது.
வேண்டுதல்:
- தோஷங்கள் நீங்க
- குழந்தை பாக்கியம் கிடைக்க
- திருமண தடை நீங்க
- வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்க
இன்னும் உங்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளுக்கு இத்தளத்திற்கு வந்து பிரார்த்தனை செய்யலாம். உங்களுக்கு உரிய நட்சத்திர தின அன்று அதிதேவதைகளை வழிபடுவதன் மூலம் உங்களின் வேண்டுதல் நிறைவேறும்.
கோவில் வரலாறு:
இந்த கோவிலில் முழுமுதற் கடவுள், மும்மூர்த்திகள், என்திசை, பாலகர்கள், நவகிரங்கள், 27 நட்சத்திர அதிதேவதைகள், அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சமேத தேவகுரு, ராகு கேது, சனீஸ்வரர் போன்ற தெய்வங்கள் காட்சி அளிக்கின்றனர்.
என்னென்ன திருவிழா நடக்கும்:
தமிழ்ப்புத்தாண்டு, சித்ரா பெளணர்மி, கஜமுகா சதுர்த்தி, காணும் பொங்கல், 108 கோ பூஜை, ஆங்கில புத்தாண்டு, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற நாட்களில் திருவிழாக்கள் நடக்கும். இதுமட்டுமில்லாமல் வாரம் வாரம் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம் போன்ற நாட்களும் விசேஷமாக இருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |