வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் தீர 27 நட்சத்திரகாரர்களும் சொல்லவேண்டிய பைரவ மந்திரம்..!

Advertisement

27 Natchathiram Bhairava Mantra in Tamil

பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக 27 நட்சத்திரக்காரர்களும் தன் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் தீர சொல்ல வேண்டிய பைரவ மந்திரம் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அபப்டி இருக்கும் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. அப்படி 12 ராசிகளுக்கும் மொத்தமாக இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27 ஆகும்.

அதுபோல அனைவருக்கும் வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது கண்டிப்பாக இருக்கும். அந்த கஷ்டங்கள் போக இந்த 27 நட்சத்திரங்களை கொண்டவர்களும் இந்த பைரவ மந்திரத்தை சொல்ல வேண்டும். ஏனென்றால், பைரவ மந்திரம் என்பது நம்முடைய கர்மவினைகளை வேகமாக பாதியாக குறைக்கும் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாட்டு முறையாகும். அதனால் இந்த மந்திரத்தை கூறவேண்டும். சரி வாங்க நண்பர்களே 27 நட்சத்திரகாரர்களும் சொல்லவேண்டிய பைரவ மந்திரத்தை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் புத்தாண்டு அன்று சொல்லவேண்டிய மந்திரம்

27 நட்சத்திர பைரவ மந்திரம்: 

அசுவினி, மகம், மூலம்:

“ஓம் ஹ்ரீம் பம் ஸ்ரீ பீஷண பைரவாய நமஹ”

பரணி, பூரம், பூராடம்:

“ஓம் ஹ்ரீம் பம் ஸ்ரீ ருரு பைரவாய நமஹ”

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்: 

“ஓம் ஹ்ரீம் பம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண பைரவாய நமஹ”

ரோகிணி, அஸ்தம், ஓணம்:

“ஓம் ஹ்ரீம் பம் ஸ்ரீ கபால பைரவாய நமஹ”

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்:

“ஓம் ஹ்ரீம் பம் ஸ்ரீ சண்ட பைரவாய நமஹ”

திருவாதிரை, சுவாதி, சதயம்:

“ஓம் ஹ்ரீம் பம் ஸ்ரீ சம்ஹார பைரவாய நமஹ”

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி:

“ஓம் ஹ்ரீம் பம் ஸ்ரீ அசிதாங்க பைரவாய நமஹ”

பூசம், அனுஷம், உத்திரட்டாதி:

“ஓம் ஹ்ரீம் ஸ்ரீ குறோதன பைரவாய நமஹ”

ஆயில்யம், கேட்டை, ரேவதி:

“ஓம் ஹ்ரீம் பம் ஸ்ரீ உன்மத்த பைரவாய நமஹ”

மேலும் அந்தந்த நட்சத்திரத்திர காரர்கள் அவர்களுக்குரிய மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதுபோல மந்திரம் எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் 108 முறை எழுத வேண்டும். இதுபோல இந்த பைரவ மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து சொல்லி வந்தால், நீங்கள் நினைத்த காரியம் வெற்றிபெறும். மேலும் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். அதுமட்டுமில்லாமல், இந்த மந்திரத்தை சொல்லும் போது அசைவம் சாப்பிடக்கூடாது. மது மற்றும் புகை போன்ற கெட்ட பழக்கங்கள் இருக்க கூடாது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement