27 நட்சத்திரம் சின்னம் | 27 Star Symbol in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 27 நட்சத்திரத்தின் சின்னங்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். இவ்வுலகில் உள்ளவர்கள் அனைவரும் ஏதோவொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் அவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள்/வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவதன் மூலம், அவரர்களின் முயற்சிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
எனவே, அனைவருமே அவரவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய குறியீடுகளை தெரிந்துக்கொண்டு அதனை தினமும் உங்கள் செயல்களில் உங்கள் முயற்சிகளில் ஏதும் ஒரு இடத்தில் பயன்படுத்தினீறீர்கள் அல்லது தினமும் உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய குறியீடுகளை பார்த்தீர்கள் என்றால் வெற்றி கிடைக்கும். அன்றாட வாழ்வில் நாம் அனைவருமே வெற்றியை தான் விரும்புகிறோம். உங்கள் கடின உழைப்புடன் சேர்த்து இதுபோன்ற செயல்களையும் செய்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
27 நட்சத்திரங்கள் பெயர்கள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள்..!
27 நட்சத்திரங்களும் அவற்றின் சின்னங்களும்:
நட்சத்திரம் | சின்னம் |
அஸ்வினி | குதிரை முகம் |
பரணி | முக்கோணம், அடுப்பு |
கார்த்திகை | கத்தி, குறிப்பாக சவரக்கத்தி, நெருப்பு ஜ்வாலை |
ரோகிணி | தேர், வண்டி |
மிருகசீரிடம் | மான் தலை, தேங்காயின் மூன்று கண் |
திருவாதிரை | மனித தலை, வைரம், கண்ணீர் துளி |
புனர்பூசம் | வில் |
பூசம் | அம்புக்கூடு, அம்பாரம், பசுவின் மடி |
ஆயில்யம் | சர்ப்பம், அம்மிக்கல் |
மகம் | பல்லக்கு, நுகத்தடி |
பூரம் | கட்டில் – சதுர வடிவம் |
உத்திரம் | கட்டில் கால் |
அஸ்தம் | உள்ளங்கை |
சித்திரை | முத்து, புலியின் கண் |
சுவாதி | தேன்கூடு, தீபம் |
விசாகம் | முறம், குயவர் சக்கரம் |
அனுஷம் | குடை, தாமரை |
கேட்டை | ஈட்டி, குண்டலம் |
மூலம் | அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை |
பூராடம் | கட்டில் வடிவம் |
உத்திராடம் | கட்டில் வடிவம் |
திருவோணம் | மூன்று பாதச்சுவடுகள், முழக்கோல் |
அவிட்டம் | மிருதங்கம், உடுக்கை |
சதயம் | பூங்கொத்து |
பூரட்டாதி | கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள் |
உத்திரட்டாதி | கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள் |
ரேவதி | மீன், படகு |
27 நட்சத்திரத்திற்கு உரிய உணவுகள் என்ன தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |