வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சூரிய பெயர்ச்சியால் ஏப்ரல் 27-க்கு பிறகு இந்த ராசிக்காரவுங்க வாழ்க்கை ஏகபோகமாக இருக்க போகுது

Updated On: April 18, 2025 1:28 PM
Follow Us:
3 zodiac signs will get royal life due to Sun Nakshatra transit in tamil
---Advertisement---
Advertisement

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி

ஜோதிட கட்டத்தில் கிரகங்களின் தலைவனாக இருப்பது சூரியன்தான். இவர் ஒவ்வொரு மாதமும் பெயர்ச்சி அடைவார். அப்படி பெயர்ச்சி அடையும் போது தன்னுடைய நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி மாற்றும் போது இதனுடைய தாக்கம் ஆனது எல்லா ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் தற்போதைய நிலையில் சூரியன் மேஷ ராசியில் அசுவினி நடச்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையை வருகின்ற 27-ம் தேதி பரணி நடச்த்திரத்தில் பெயர்ச்சி அடையவுள்ளார். இதனுடைய தாக்கம் ஆனது 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிகளுக்கு மட்டுமே பலன்களை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

கும்பம்:

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி

கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி ஆனது எல்லா விஷயத்திலும் அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. இந்த நேரத்தில் உங்களுடைய தன்னம்பிக்கையானது அதிகரிக்கும். இதனால் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை அடைவீர்கள். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பணவரவு சிறப்பாக காணப்படும். இதனை நீங்கள் பயனுள்ள வகையில் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. உங்களின் துணையிடம் நேரத்தை செலவிடுவீர்கள். இதன் மூலம் இருவரும் ஒருவரைக்கொருவர் புரிந்து கொள்வார்கள். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் நன்மை வாய்ந்ததாக இருக்கும். உங்களுடைய லாபம் ஆனது இரட்டிப்பாகும்.

சனி, சுக்கிரன், புதன் 100 ஆண்டுக்கு அப்புறம் சேர்க்கை இதனால் எந்த பக்கம் போனாலும் பணம் வரும்..

விருச்சிகம்:

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை தரும். ஏதேனும் சட்ட வழக்குகளை சந்தித்து வந்திருந்தால் இந்த காலம் அதிலிருந்து வெளிவந்து விடுவீர்கள். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்குஎல்லா விதத்திலும் நன்மையை தரக்கூடியதாக இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் தங்களின் வாழ்க்கையில் இருந்த எதிரிகளை அழித்து விடுவார்கள். இவர்களின் போட்டியாளர்களுக்கு கடும் போட்டியை தரக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் பணவரவு அதிகரிக்கும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய காலமாக இருக்கும்.

கடகம்:

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சியானது எல்லா விதத்திலும் வெற்றிகள் குமியும் நேரமாக இருக்கும். நீங்கள் நீண்ட நாளாக அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று வெயிட் செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு உகந்த காலமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உங்களுடைய எல்லா செயல்களுக்கும் தந்தை பக்க பலமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக முடியாத வேலை இந்த காலத்தில் ஆவை முடிவுக்கு வரக்கூடும். நிதிநிலைமையில் எந்த குறைவும் இருக்காது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பெரிய முதலீடுகளில் பணத்தை சேமிப்பீர்கள்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now