48 Days Before Thaipusam 2025 Date in Tamil | தைப்பூசம் 48 நாட்கள் விரதம்
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த ஆண்டு 2025 தைப்பூசம் ஆனது, பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று வருகிறது. தைப்பூசத்திற்கு 48 நாட்கள் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள் தைப்பூசம் தினத்தன்று மட்டும் விரதம் இருந்து வழிபாடுவார்கள். பொதுவாக முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் இரண்டு முறையில் விரதம் இருப்பார்கள். ஒன்று மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். மற்றொன்று காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். இவற்றில் ஐப்பசி மாதம் வரும் கந்தசஷ்டி விழாவில் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவற்றிக்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.
தைப்பூசதிற்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு சென்று முருக பெருமானை வழிபடுவார்கள். அப்படி 48 நாட்கள் விரதம் இருக்க நினைக்கும் நபர்கள் எந்த நாளில் இருந்து தைப்பூச விரதத்தினை தொடங்க வேண்டும்.? எந்த தினத்தில் விரதத்தை முடிக்க வேண்டும்.? உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
48 Days Before Thaipusam 2025 Date in Tamil:
தைப்பூசம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. எனவே, விரதம் இருக்கும் நபர்கள் டிசம்பர் 25.12.2024 அன்று புதன்கிழமை அன்றிலிருந்து விரதம் இருக்க தொடங்கலாம். பிப்ரவரி 10 ஆம் தேதியன்றுநிறைவு செய்து விடலாம். பிப்ரவரி 11 தைப்பூசம்.தைப்பூசம் வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தைப்பூசம் 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை:
- தைப்பூசம் 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் காலை மாலை என இருவேளையும் குளித்துவிட்டு முருகனுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.
- சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு வேளை உணவு உட்கொண்டும் ஒரு வேளை உணவு உட்கொண்டு விரதம் இருக்கலாம். அவரவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப விரதத்தினை கடைபிடிக்கலாம்.
- மனதில் முருகனை நினைத்துக்கொண்டு உங்களால் எதை செய்ய முடியுமோ அதனை முழு மனதோடு செய்யுங்கள். விரதம் இருக்கும் 48 நாட்களும் தினமும் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிப்படுங்கள். காலை மாலை என இரு வேளையும் கந்தசஷ்டி கவசம், முருகன் மந்திரங்களை உச்சரியுங்கள். “ஓம் சரவணபவ” மந்திரத்தை நேரம் இருக்கும்போதெல்லம் உச்சரியுங்கள்.
- மனதில் எந்த வித கெட்ட எண்ணங்களும் இருக்கக்கூடாது. தீய சொற்களை பேசுதல் கூடாது. மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் காலை மாலை என இருவேளையும் குளித்து விட்டு முருகனுக்கு நெய்வேத்தியம் படைத்து அதன் பிறகு சாப்பிட வேண்டும்.
- தைப்பூச நாளில், காலையில் எழுந்து குளித்துவிட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த கலிவெண்பா போன்ற பதிகங்களை உச்சரிக்க வேண்டும்.
தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |