5 Important Porutham for Marriage in Tamil..!
திருமணம் வயதில் இருக்கம் ஆண், பெண் இருவருக்கும் சரியான திருமணம் பொருத்தம் இருக்கிறதா என்று திருமணம் பொருத்தம் பார்க்கப்படுவது வழக்கமான விஷயம் ஆகும். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தமாக 36 பொருத்தங்கள் இருக்கிறதாம். இந்த 36 பொருத்தங்களில் நாம் பரவலாக பார்க்கப்படுகிறது.
அதிலும் முக்கிய இருமனம் பொருத்தமாக 10 பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இந்த 10 பொருத்தத்தில் 5 பொருத்தம் இருந்தாலே போதும் திருமணம் செய்யலாம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இந்த ஐந்து முக்கிய பொருத்தம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
ஐந்து திருமண பொருத்தம்:
தினம் பொருத்தம்:
இந்த தின பொருத்தம் என்பது எதற்குரிய பொருத்தமாக பார்க்கப்படுகிறது என்றால் தினம் தினம் கணவன் மனைவி உறவுக்குள் அன்றாட வாழ்க்கையில் சந்தோசம் என்பார்கள். இந்த தின பொருத்தம் இல்லை என்றால் அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையான போராட்டம், ஏதாவது ஒரு வகையான பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க வேண்டியதை இருக்கும்.
கணப் பொருத்தம்:
திருமணம் பொருத்தத்தில் மிகவும் அவசியமாக பார்க்கப்படும் பொருத்தம் கணப்பொருத்தம் ஆகும். இந்த கணப்பொருத்தம் எதற்குரிய பொருத்தம் என்றால் குணாதிசியங்கள் குறிக்கும் பொருத்தம் ஆகும். இந்த பொருத்தம் ஏன் இருக்க வேண்டும் என்றால் இருவருடைய குணங்களுமே ஒன்றி வர வேண்டும். இல்லை என்றால் இருவருக்குமே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆக இந்த கணப்பொருத்தம் திருமணம் பொருத்தத்தில் அவசியமாக பார்க்கப்படும் ஒரு பொருத்தமாக உள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கணப் பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை
யோனி பொருத்தம்:
இந்த யோனி பொருத்தம் என்பது திருமணம் பொருத்தத்தில் மிகவும் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. அதாவது கணவன், மனைவி இருவருக்குள் இருக்ககூடிய தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய பொருத்தமாக இந்த யோனி பொருத்தம் உள்ளது. இந்த பொருத்தம் இல்லை என்றால் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது.
ராசி பொருத்தம்:
திருமணம் பொருத்தத்தில் அடுத்ததாக பார்க்க போவது ராசி பொருத்தம். இந்த ராசி பொருத்தம் எதற்க்காக பார்க்கப்படுகிறது என்றால். ஒரு தம்பதியர்களை சேர்த்து வைத்தால் அவர்களுடைய குடும்பம் விருத்தி அடையுமா என்பதை குறிப்பது தான் இந்த ராசி பொருத்தம். அதாவது திருமணம் ஆகி ஒரு பெண் வீட்டிற்குள் போகும் போது அந்த பெண்ணால் அவர்களது வீட்டில் நல்ல விஷயங்கள் நிறைய நிகழ்கிறது என்னால் அந்த பெண்ணின் ராசியால் தான் என்று சொல்வார்கள் அல்லவா அதனை தான் ராசி பொருத்தம் என்று சொல்லபோடுகிறது. இது ஆண் பெண் இருவருக்குமே சொல்லப்படுகிறது.
ரஜ்ஜு பொருத்தம்:
திருமணம் பொருத்தத்தில் 10-யில் 9 பொருத்தம் இருந்தும் இந்த ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யவே கூடாது. இவற்றில் எந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றால் ரஜ்ஜு பொருத்தமும், யோனி பொருத்தமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த இரண்டு பொருத்தம் இல்லை என்றால் அந்த தம்பதியருக்கு திருமணம் செய்து வைக்கவே கூடாது. இந்த பொருத்தம் இல்லாமல் ஒரு தம்பதியருக்கு திருமணம் செய்து வைத்தால் அந்த உறவில் பல சங்கடங்களை மட்டுமே சந்திக்க வேண்டி இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருமணத்திற்கு ஏன் ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது தெரியுமா?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |