9 நவகிரகங்கள் சுற்றுலா..! முழுமையான தகவல்கள்..!

9 நவகிரகங்கள்

9 நவகிரகங்கள் சுற்றுலா..!

9 நவகாரங்கள் சுற்றுலா செல்பவர்களா நீங்கள்.. அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. அதாவது இந்த 9 நவகிரகங்கள் ஸ்தலங்கள் அனைத்தும் கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்துள்ளது.

சரி இந்த பகுதியில் 9 நவகிரகங்கள் ஸ்தலங்கள் பற்றிய விவரங்களை, அதாவது 9 நவகிரகங்கள் எங்கு அமைந்துள்ளது, அங்கு செல்லும் வழி, எந்த ஸ்தலங்களில் என்னென்ன பரிகாரங்கள் மற்றும் பிராத்தனைகள் செய்ய வேண்டும்,  ஆலயம் நடைதிறப்பு நேரம் ஆகிய விவரங்களை இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

9 நவகிரகங்கள் (சந்திரன்) – திங்களூர் கைலாசநாதர்:-

9 நவகிரகத் தலங்களுள் சந்திரன் தலம் திங்களூர் ஆகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் (kailasanathar temple) அமைந்துள்ளது.

இந்த கோவிலில்  திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க பிராத்தனை செய்கின்றன.

தினந்தோறும் இந்த ஆலயம் காலை 06.00 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை திறந்திருக்கும். அதன் பிறகு மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

மேலும் இந்த ஆலயத்தை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…

திங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலின் விவரங்கள்..!

 

9 நவகிரகங்கள் வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய் ஸ்தலம்):-

நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு. மக்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரி முறையாக மருத்துவம் பார்க்காததால், சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம்.

வைத்தீஸ்வரன் கோயில் செல்லும் வழி:

திருச்சி வழியாக வரும் பக்தர்கள் மயிலாடுதுறை வழியாக சென்றடையலாம்.

சென்னை வழியாக வரும் பக்தர்கள் புதுச்சேரி மற்றும் சிதம்பரம் வழியாக இந்த கோயிலுக்கு வர முடியும்.

கோவில் திறக்கப்படும் நேரம்:-

காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடை திறக்கப்படும்.

மலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்படுகிறது.

மேலும் இந்த ஆலயத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…

வைத்தீஸ்வரன் கோயில் தல வரலாறு (செவ்வாய் ஸ்தலம்)..!

9 நவகிரகங்கள் – ஆலங்குடி குரு ஸ்தலம்:-

9 நவகிரகங்கள் ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஆலங்குடி குரு ஸ்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இங்கு மூலவராக ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர் அமைந்துள்ளார், அம்மையாக ஏலவார்குழலி(சுக்ரவார அம்பிகை) தேவியும் அருள்பாலிக்கின்றார்.

இந்த கோவிலில் நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

ஆலங்குடி குரு ஸ்தலம் செல்லும் வழி:

கும்பகோணம் – நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.

கோவில் திறக்கப்படும் நேரம்:

காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மேலும் இந்த ஆலயத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…

ஆலங்குடி குரு பகவான் கோவிலின் சிறப்புகள் ..!

 

9 நவகிரகங்கள் – கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் பரிகாரத் ஸ்தலம்:

நவகிரக ஸ்தலங்களில் கேது பகவானுக்கு (kethu bhagavan) உரிய ஸ்தலமாக கீழப்பெரும்பள்ளம் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் இறைவன் நாகநாதஸ்வாமியாக அருள்பாலிக்கின்றார், அம்பாள் சௌந்தர்யநாயகியாக அருள்பாலிக்கின்றார்.

நாகதோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய இத்தலம் கீழப்பெரும்பள்ளம்.

கீழப்பெரும்பள்ளம் செல்லும் வழி:-

சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் பூம்புகார் செல்லும் சாலையில் தர்மகுளம் என்ற பேருந்து நிறுத்தம் வரும்.

அங்கிருந்து பிரியும் கீழப்பெரும்பள்ளம் சாலையில் இருந்து சுமார் 2கி. மீ பயணித்தால் கோயிலை அடையலாம். தர்மகுளம் நிறுத்தத்தில் இருந்து நிறைய ஆட்டோ வசதிகள் உள்ளது.

கோவில் திறக்கப்படும் நேரம் :

காலை 06.00 முதல் பிற்பகல் 01.00 வரை திறக்கப்படும். பின்பு மாலை 03.30 மணி முதல் 08.30 வரை திறக்கப்படும்.

மேலும் இந்த ஆலையத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…

அருள்மிகு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் பரிகாரத் ஸ்தலம்..!

 

9 நவகிரகங்கள் – திருநள்ளாறு (சனி பகவான்) தர்ப்பாரண்யேசுவரர் கோயில் சிறப்பு..!

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். இந்த திருத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மூலவர் தர்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தின் மீது முளைத்த தழும்புகள் உள்ளது. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் நந்தியும் பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கி இருப்பதை காணமுடியும்.

பக்தகோடிகள் சனி தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் நீங்க பிரம்மதீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் குளத்திலும் நீராடி பிராத்தனை செய்வார்கள்.

கோவில் திறக்கப்படும் நேரம்:

காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலயம் திறக்கப்படும்.

பின்பு மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும்.

மேலும் இந்த ஆலயத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் சிறப்பு..!

 

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்வோம்.. அது வரை நம் பொதுநலம் வெப்சைட்டை தினமும் பார்வையிடுங்கள் நன்றி நண்பர்களே..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்