சுக்கிரன் ஸ்தலமான அக்னீஸ்வரர் திருக்கோயிலின் சிறப்பு..!

Advertisement

கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் (shiva temple)

நவக்கிரக ஸ்தலங்களில் ஒவ்வொரு ஸ்தலங்களும் ஒரு பரிகாரத்திற்கு பெயர் பெற்றது. அவற்றில் இப்போது நாம் நவகிரங்களில் ஒன்றான சுக்கிரன் ஸ்தலத்தை (shiva temple) பற்றி இப்போது காண்போம்.

நவக்கிரக ஸ்தலங்களில் சுக்ரனுக்கு உகந்த ஸ்தலம் கஞ்சனூர். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஸ்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் அக்னீஸ்வரர் சுக்ரனாக காட்சியளிக்கிறார் மற்றும் தேவியின் பெயர் கற்பகாம்பாள்.

கஞ்சமாரன் நாயனார் அவதரித்த ஊர் என்பதால் இந்த ஊர் கஞ்சனூர் என்று பெயர் பெற்றது. அப்பர் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் (shiva temple) இதுவும் ஒன்று. இது தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36-வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினதிற்குட்பட்ட கோயிலாகும்.

தல சிறப்பு:

நவக்கிரக ஸ்தலங்களில் இது சுக்கிரனுக்கு உரிய ஸ்தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

இங்கு சுக்கிரனுக்கு என்று தனி சன்னதி உள்ளது மற்றும் உயர்ந்த சிவன்,  பணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியிடன் இருப்பது தனி சிறப்பு வாய்ந்தது. இந்த ஸ்தலத்தில் ஈசன், பிரம்மனுக்கு திருமணக்கோலத்தை காட்டியருளினார்.

எனவே தான், அம்மையை தன் வலப்பக்கத்தில் சிவன் கொண்டிருக்கிறார். பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே தான் இங்குள்ள நடராஜர் “முக்தி தாண்டவ மூர்த்தி” என அழைக்கப்படுகிறார்.

பொது தகவல்:

இங்குள்ள கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலையுடையது. பழமையான கோயில், தெற்கு வாயில் வழியாக உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது. பிரகாரம் வலம் வந்து மண்டபத்தையடைந்தால், இடப்பால் விநாயகர் தரிசனம், வலப்பால் விசுவநாதர் சன்னதி, அடுத்து அம்பாள் சன்னதி, உள்வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதிக்கு செல்லும் போது, இடப்பால் விநாயகர், மயூரசுப்பிரமணியர்., மகாலட்சுமி சன்னதிகள் உள்ளது.

தலமரம் – புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்த மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளது.

அதன் பக்கத்தில் சுரைக்காய் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சன்னதி, நால்வர் சன்னதிகள் உள்ளது.

வேண்டுதல்:

உடல்பிணி, சோகை, சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தலத்தில் பக்தர்கள் பிராத்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் தங்கள் தேர்த்திக்கடனை அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தியும் வழிபாடு செய்கின்றனர்.

திருவிழாக்கள்:

மாசி மகம், தைத்திங்களில் ஹரதத்தர் காட்சி, ஆடிப்பூரம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி ஆகிய விழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு, சுதர்சன் என்ற குழந்தை பிறந்தது வைணவகுடும்பத்தில் அந்த குழந்தை பிறந்ததால் சிவபக்தியில் சிறந்து விளங்கியது.

பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர், தினமும் காலையில் கஞ்சனூரில் இருந்து கிளம்பி திருமந்துறை,  திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருகோடிக்க ஆகிய சிவத்தலங்களை (shiva temple) தரிசித்துவிட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்திற்கு திரும்புவதை தனது வழக்கமாக கொண்டிருந்தார்.

வைணவரான சுதர்சன் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதால் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்க காய்ச்சிய முக்காலி மீது அமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சன் மும்முறை கூறியதை கண்டவர்கள் வியந்தனர்.

ஹரதத்தருக்கு அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்க்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை அளித்தார்.

ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோல் காட்சி அளிப்பார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் தெரியாமல் விழித்தார்.

விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழைப் பிராமணர் வடிவில் சென்று கஞ்சி வாங்கி உண்டதாகவும் அதன் காரணமாக வயிறு நிரம்பிவிட செல்வந்தரரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார்.

இதன் மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வந்தர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் , ஏழை அந்தனராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளது.

ஊருக்குள் வரும்போது, அரச மரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக் கோயிலும் இத்தலத்தில் உள்ளது.

கோயில் திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்கப்படும்.
பின்பு மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறக்கப்படும்.

முகவரி:

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், துகிலி(வழி) , திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், 609804.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement