அருள்மிகு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் பரிகாரத் ஸ்தலம்..!
நவகிரக ஸ்தலங்களில் கேது பகவானுக்கு (kethu bhagavan) உரிய ஸ்தலமாக கீழப்பெரும்பள்ளம் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் இறைவன் நாகநாதஸ்வாமியாக அருள்பாலிக்கின்றார், அம்பாள் சௌந்தர்யநாயகியாக அருள்பாலிக்கின்றார்.
சரி இப்போது அருள்மிகு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் (kethu bhagavan) பரிகாரத் ஸ்தலம் பற்றிய விவரங்களை காண்போம் வாங்க…
சூரியனார் திருக்கோவிலின் சிறப்பு..!
கேது பகவான் (Kethu Bhagavan) பிறப்பு வரலாறு:
கேது பகவான் (Kethu Bhagavan) பிறப்பில் ஒரு அசுரன். விப்ரசித்து மற்றும் சிம்கிகைக்கு மகனாக பிறந்து வளர்ந்து வந்தான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும்போது, அமிர்தம் வெளிப்பட்டது.
அப்போது மகாவிஷ்ணு மோகினியாக மாறி தேவர்களுக்கு அமிர்தத்தை பரிமாறிக்கொண்டிருந்தார். அப்போது அசுரனாகிய கேது தானும் அமிர்தத்தை பருகவேண்டும் என்று நினைத்த கேது, உருவத்தை மாற்றிக்கொண்டு, தேவர்களின் வரிசையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு, மகாவிஷ்ணுவிடம் அமிர்தத்தை பெற்று பருகிவிட்டான்.
உண்மையை அறிந்த சூரியனும், சந்திரனும் மகாவிஷ்ணுவிடம் சொல்ல, மகாவிஷ்ணு தன் கையில் வைத்திருந்த அகம்பையால் கேதுவின் கழுத்தில் வீச, கேது தலை வேறாக, உடல் வேறாக விழுந்தான்.
இருப்பினும் அமிர்தத்தின் மகிமையால் அவனது உடலில் உயிர் இருந்து. இருப்பினும் தனது தவறை உணர்ந்த கேது, இறைவனிடம் வேண்டி நிற்க, இறைவன் அவனது உடலில் ஐந்து நாகத்தலையுடன் செந்நிறமாக மாற்றி அருள் செய்தார்.
மேலும் கேதுவை இரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார். எனவே நவகிரகங்களில் ஒன்றான கேது வழிபட்ட ஸ்தலங்களில் கீழப்பெரும்பள்ளமும் ஒன்று.
தல வரலாறு:
அமிர்தம் பெற வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி எனும் நாகத்தை கையராகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது வலி தாங்காத வாசுகி நஞ்சைக் கக்கியது.
இந்த நஞ்சை உண்ட சிவன்பெருமான் நீலகண்டன் என்ற பெயர்பெற்றார். அப்போது அசுரர்கள் அமிர்தம் கிடைக்காததின் கோபத்தால் வாசுகி நாகத்தை தாக்கி வீசி எறிந்தனர், வீசி எறியப்பட்ட இந்த வாசுகி நாகம் பூம்புகார் அருகில் இருந்த மூங்கில் காட்டில் வந்து விழுந்தது வாசுகி நாகம், சிவபெருமான் நஞ்சு உண்ண, தான் காரணமாகிவிட்டோமே என்று வருந்தியது.
சுக்கிரன் ஸ்தலமான அக்னீஸ்வரர் திருக்கோயிலின் சிறப்பு..!
அதன் காரணமாக சிவனை நோக்கு தவம் செய்ய, சிவபெருமான் காட்சியளித்தார் அப்போது வாசுகி நாகம் தான் செய்த பாவத்தை மன்னித்து அருளும்படியும், தான் தவம் செய்த இந்த மூங்கில் காட்டிலேயே கோவில்கொண்டு பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று வாசுகி நாகம் கேட்டுக்கொண்டது.
அதன்படியே மூங்கில் காடான இத்தலத்தில் கோயில் கொண்டு, நாகநாதர் என்ற பெயரில் இறைவன் காட்சியளிக்கின்றார்.
கோவில் அமைப்பு:
இத்தலத்தில் இராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் மேற்புறத்தில், ரிஷபாரூடராக சிவபெருமான் சுதை வடிவில் காட்சி தருகின்றார்.
முகப்பு வாயிலை கடந்து உள்ளே சென்றால் ஒரு பெரிய நந்தியை காணமுடியும். இறைவன் நாகநாதஸ்வாமி கிழக்கு நோக்கி லிங்க உருவத்தில் எழுந்தருளியுள்ளார்.
கேது பகவான் (Kethu Bhagavan) தனி சந்நிதியில் மேற்கு நோக்கி, பாம்பு தலையுடனும், மனித உடலுடனும் இருக்கைகளை கூப்பி சிவன் சந்நிதியை நோக்கி வணங்கியபடி உள்ளார்.
இத்தலத்தில் கேதுவே பிரதானமாதலால், இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது. மேலும் பிரகாரத்தில் சனீஸ்வரரும், இரண்டு சூரியர்களும் காட்சி தருகின்றனர்.
கேது பகவான் (Kethu Bhagavan) வழிபாடு :
நாகதோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய இத்தலம் கீழப்பெரும்பள்ளம்.
கேதுவின் நிறம் சிவப்பு என்பதால், இவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற ஆடை அணிந்து கேது பகவானை (Kethu Bhagavan) வழிபட வேண்டும்.
மேலும் கொள்ளு சாதம் படைத்து வழிபட வேண்டும். பின்பு படைத்த கொள்ளு சாதத்தை இங்கேயே வரும் பக்தர்களுக்கு விநியோகித்துவிட வேண்டும். படைத்த கொள்ளு சாதத்தை வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது.
ஜாதகத்தின்படி, கேது திசை மற்றும் கேது பெயர்ச்சி நடைபெரும் காலங்களில் இத்தலம் வந்து கேதுபகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிப்பட்டால், கேதுவினால், ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நேர்த்தி கடன்:
கேது பகவானுக்கு (Kethu Bhagavan) கொள்ளு சாதம் நெய்வேத்தியம் படைத்து, பலவண்ண வஸ்திரங்கள் சாத்தியும் இறைவனை வழிபடுவார்கள்.
விசேஷ நாட்கள்:
இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேது பகவானுக்கு (Kethu Bhagavan) விசேஷ வழிபாடுகள் நடைபெறும், அதேபோல் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
அப்போது 16 வகை அபிஷேகங்கள் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நெய்வேத்தியமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியம், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் இறைவனை வழிபடுவார்கள்.
இந்த பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம் செய்துகொள்ள பக்தர்கள் அதிகளவு இந்த இத்தலத்திற்கு வந்து செல்வார்கள். மேலும் ராகு கேது பெயற்சியின்போது இத்தலத்தில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்படும்.
கீழப்பெரும்பள்ளம் செல்லுங்கள் கேது தோஷத்தில் இருந்து விடுபெருங்கள்..!
கேது பகவான் (kethu bhagavan) ஆலயத்திற்கு செல்லும் வழி:
சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் பூம்புகார் செல்லும் சாலையில் தர்மகுளம் என்ற பேருந்து நிறுத்தம் வரும்.
அங்கிருந்து பிரியும் கீழப்பெரும்பள்ளம் சாலையில் இருந்து சுமார் 2கி. மீ பயணித்தால் கோயிலை அடையலாம். தர்மகுளம் நிறுத்தத்தில் இருந்து நிறைய ஆட்டோ வசதிகள் உள்ளது.
கேது பகவான் (kethu bhagavan) ஆலயம் முகவரி:
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், கீழப்பெரும்பள்ளம், தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம் – 609 105.
கோவில் திறக்கப்படும் நேரம்:-
காலை 06.00 முதல் பிற்பகல் 01.00 வரை திறக்கப்படும். பின்பு மாலை 03.30 மணி முதல் 08.30 வரை திறக்கப்படும்.
திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்பு..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |