அருள்மிகு திருநாகேஸ்வரம் ராகு பகவான் ஸ்தலம் சிறப்புகள்..!

Advertisement

அருள்மிகு திருநாகேஸ்வரம் கோவில் சிறப்பு..! | Navagraha Temple..!

மனிதர்கள் தவறு செய்வது இயற்கை என்பது நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தேவர்கள் மற்றும் நவகிரக நாயகர்களும் கூட சில சமயங்களில் தவறிழைத்திருக்கின்றனர். அப்படி ஒரு தவறை இழைத்து அதனால் தன் சக்திகளை இழந்த ராகு பகவான் தனது வலிமையை மீண்டும் பெற்ற “திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதர் திருக்கோவிலை” பற்றி இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க..!

புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..!

திருநாகேஸ்வரம் பெயர் காரணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கு நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, சிவபெருமானை பூசித்த நாகநாதர் கோவில் உள்ளது. நாக அரசராகிய ராகு பூசித்த காரணத்தால், இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது.

திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார்.

சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார்.

பிராத்தனை:

இந்த ஸ்தலத்தில் ஞாயிறு மலை 4.30 மணி முதல் 6.00 -க்குள் ராகுகால வேளையில் பூஜை செய்வதினால் சகலனியர்களும் நீங்கும்.

இறுதி காலத்தில் உண்டாகும் மரண துன்பங்கள் அறவே இல்லாமல் போகும்.

ரிஷபத்தின் முன்நிற்கும் உமையொரு பாகனை ஞாயிறு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இறைவனை வழிபட்டு வந்தால் பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர்வார்கள்.

ஆலங்குடி குரு பகவான் கோவிலின் சிறப்புகள் ..!

திருநாகேஸ்வரம் கோவில் சிறப்பு:

திருநாகேஸ்வரம் கோவில் சிறப்பு – இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார், இத்தலத்தில் சித்திரை மாதத்தில் சூரியன் ஒளி 11,12,13 தேதிகளில் லிங்கத்தின் மீது படும். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல்கள் பெற்ற 274 சிவத்தலங்களில் 90 வது தேவாரதலமாகும்.

இறைவனின் நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.

இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது.

அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது.

திருநாகேஸ்வரம் வரலாறு:

ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் பூமியை தாங்கிக்கொண்டிருந்தார், அப்பொழுது மனிதர்கள் சேர்த்த பாவங்களினால் அவரால் பூமியை சுமக்க முடியவில்லை.

அவர் மிகவும் உடல் சோர்வடைந்தார், எனவே உடனே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டி நின்றார். உலகை தாங்குவதற்கு உரிய சக்தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார். ஆதிசேஷனின் வேண்டுதலுக்கு மனம் இறங்கிய சிவபெருமான்,

எவ்வளவு காலமானாலும் ஒரே தலையில் தாங்கும் சக்தியை தருவதாக சிவபெருமான் உறுதியளித்தார். பரிபூரண சக்தி பெற ஆதிசேஷன் அமுத கும்பத்தில் இருந்து வில்வம் விழுந்த இடமான கும்பகோணத்தின் ஒரு பகுதிக்கு வந்தான், அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.

நாகராஜன் பூஜித்ததால் நாகேஸ்வரன் என பெயர் பெற்றார். ஓரு காலத்தில் வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தின் உச்சியில் இருந்து வில்வம் தவறி விழுந்து. அந்த இடம் வில்வவனம் என்று பெயர் பெற்றது. இவ்விடத்தில் கோயில் அமைந்ததால் சுவாமிக்கு வில்வனேசர் மற்றும் பாதாள பீஜனாதர் ஆகிய பெயர்களும் வழங்கப்பட்டது. மடந்தை பாகர், செல்வபிரான் போன்ற பெயர்களும் சுவாமிக்கு  உண்டு.

எந்த நட்சத்திரகாரர்கள் என்ன காயத்திரி மந்திரங்கள் சொல்லவேண்டும்..?

ராகு கேது தோஷம் நீங்க:

ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தோஷம் நீங்கும். மேலும் திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியின்மை, ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க இராகு தசை, இராகு புக்திகளில் இராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.

திருநாகேஸ்வரம் கோவில் அமைப்பு:

ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும், கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது.

கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன.

புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும்.

கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன.

சேக்கிழார், அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.

அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன்.

அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து பெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.

இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக “கிரி குசாம்பிகை” சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் சிறப்பு..!

திருநாகேஸ்வரம் கோயில் திறக்கும் நேரம்:

  • காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரை.
  • மலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறக்கப்படும்.

திருநாகேஸ்வரம் ஆலயம் முகவரி:

  • அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், (குடந்தைக் கீழ்க்கோட்டம்) கும்பகோணம் – 612 001) தஞ்சாவூர் மாவட்டம்.

திருநாகேஸ்வரம் திருவிழா:

மகாமகதன்று சுவாமி இங்கிருந்து மகாமகம் குளத்திற்கு தீர்த்தவாரிக்கு செல்வது மிகவும் விசேஷமான ஒன்று. இது தவிர்த்து நவராத்திரி, திருவாதிரை, பங்குனி பெருவிழா ஆகியவையும் விசேஷமானது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ரங்கோலி, ஆன்மிகம் மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.
Advertisement