திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்பு..!

Shiva Temple

திருவெண்காடு புதன் ஸ்தலம்..!

நாகை மாவட்டத்தில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் திருவெண்காடு சிவத்தலத்தை (Shiva Temple) பற்றித் தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த ஸ்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக சிவன்பெருமான் அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவஸ்தலமாக (Shiva Temple) இது விளங்குகிறது.

இங்கு சிவன் சுவேதாரண்யேஸ்வரர் என்ற பெயரிலும், அன்னை பிரம வித்தியம்பிகை என்ற பெயரிலும் அருள்பாலிக்கிறார். ஆதி சிதம்பரம் திருவெண்காடு என்ற புராண பெயரிலும் இந்த ஸ்தலம் அழைக்கப்படுகிறது.

நவகிரக ஸ்தலங்களில் இது புதன் ஸ்தலமாக விளங்குகிறது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு ருத்ர பாதம், விருட்சத்தின் கீழ் அமைந்துள்ளது.

சுவேதாரண்யேசுவரர்க்கு, திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காட்டு நாயனார், திருவெண்காடு பெருமான் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவரே ஸ்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

இந்த ஸ்தலத்தில் படி லிங்கத்திற்கு தினமும் நான்கு அபிஷேகங்களும், இங்குள்ள நடராஜர் பெருமானுக்கு ஆண்டிற்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுமாம்.

இந்த ஸ்தலம் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்தலமாக விளங்குகிறது.

தல வரலாறு:

பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர்.

அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.

ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தியாக தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான்.

சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் (Shiva Temple) இது. நவக்கிரக தலத்தில் இது புதன் தலமாகும்.

சிறப்பு:

சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.

புதன் ஸ்தலங்களில் முதல் ஸ்தலமாக விளங்குகிறது.

சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.

பரிகாரம்:

நரம்பு சம்மந்தமான நோய்கள் உள்ளவர்கள் புதன் பகவானை வழிபட்டு வந்தால் நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் என்பது மக்களின் அயராது நம்பிக்கையாக விளங்குகிறது.

மேலும் புத்திர தோசம், திருமண தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு உரிய பச்சை வஸ்திரத்தை அணிந்து கொண்டு வெண்காந்த மலர் சூட்டி, பாசி பருப்பு பொடியில் காரம் சேர்த்து நெய்வேத்தியம் செய்து, இரணவனை வணங்கி வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களது அயராத நம்பிக்கையாக இருக்குறது.

சன்னதி திறக்கும் நேரம்:

காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சன்னதி திறக்கப்படும்.

பின்பு மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை திறக்கப்படும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE