வைத்தீஸ்வரன் கோயில் தல வரலாறு (செவ்வாய் ஸ்தலம்)..!

Advertisement

வைத்தீஸ்வரன் கோயில் தல வரலாறு (செவ்வாய் ஸ்தலம்)..!

வைத்தீஸ்வரன் கோவில்: நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு. மக்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரி முறையாக மருத்துவம் பார்க்காததால், சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம்.

காஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..!

 

சரி வாருங்கள் இந்த பகுதியில் வைத்தீஸ்வரன் திருக்கோவிலின் (vaitheeswaran koil) சிறப்பை பற்றி காண்போம்..

வைத்தீஸ்வரன் கோயில் தல வரலாறு:

வைத்தீஸ்வரன் கோயில் தல வரலாறு: சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த ஸ்தலத்தில் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும். அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவிலுக்கு (vaitheeswaran koil) புள்ளிருக்கு வேளூர் என்ற வேறு பெயரும் உள்ளது. புள் என்ற சடாயு பறவை ராஜனும், இருக்கு என்ற வேதமும், வேள் என்ற முருகப்பெருமானும், ஊர் என்ற சூரியன் ஆகிய நால்வரும், இத்தலத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இப்பெயர் பெற்றது. கோவிலின் பெயர் சித்தாமிர்தம் குளம் என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் இந்த குள கரையில் சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது ஒரு பாம்பு தவளையை முழுங்க முயன்றது, அப்போது அவற்றை சதானந்த முனிவர் சபித்தார். அதன் காரணமாக இன்று வரை இந்த குளத்தில் பாம்பு, தவளை போன்றவை காணப்படுவது இல்லையாம்.

இந்த கோவிலின் மூலவர் சந்நிதிக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளது. மற்ற கோவில்களில் நவகிரகங்கள் ஓரு குறிப்பிட்ட அமைப்பில் அமைந்திருக்கும். ஆனால் இந்த இத்தலத்தில் நவகிரங்கள் அனைத்தும் மூலவரான சிவபெருமான் பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்கு பணிந்து பக்தர்களின் நோய்களையும், தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம்.

வைத்தீஸ்வரன் கோயில் அமைப்பு:

இந்த கோவிலின் கிழக்கில் பைரவ மூர்த்தியும், தெற்கில் விநாயகர், மேற்கில் வீரப்பத்திரியர், வடக்கில் காளி ஆகியவர்கள் காவல் தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. ஐந்து பிரகாரங்கள் கொண்ட இந்த கோவில், ஏழு நிலை ராஜ கோபுரங்கள் கொண்டது. தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது.

கிருஷ்ணன் | கண்ணன் | விஷ்ணு | 108 பெருமாள் பெயர்கள்..!

வைத்தீஸ்வரன் கோயில் தல பெருமை:

முன்னொரு காலத்தில் அங்காரகன், வெண் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு சிவன் பெருமானை வேண்டி நிற்க, அங்காரகனின் வேண்டுதலை ஏற்று அருள்பாலித்த ஈசன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு (vaitheeswaran koil) சென்று சித்தமராத தீர்த்தத்தில் நீராடி வைத்யநாதனை வழிபடுமாறு கூறியுள்ளார். அங்காரகனும் அவ்வாறு செய்ய, அங்காரகனின் வெண் குஷ்ட நோயும் குணமானது. இதனால் இத்தலத்தில் உள்ள சித்தமராத குளத்தில் நீராடினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் அயராத நம்பிக்கையாக உள்ளது.

வைத்தீஸ்வரன் கோவில் திருவிழா:

கந்தசஷ்டித் திருவிழா,

செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் ஆட்டுக்கிடா வாகனத்தில் அங்காரகன் எழுந்தருளுவார்,

ஆடிப்பூரம்,

நவராத்திரி,

கிருத்திகை,

தை மாதத்தில் முத்துக்குமார சுவாமிக்குத் திருவிழா,

பங்குனிப் பெருவிழா.

பங்குனி உத்திரத்தின் போது நாய் ஓட்டம், நரி ஓட்டம் என்ற நிகழ்விற்கு ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.

குழந்தையான முருக பெருமானை மகிழ்விக்க இந்த யானை ஓட்டம் என்ற விளையாட்டு காட்டும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெறுகிறது.

தோஷங்கள் நீங்க வைத்தீஸ்வரன் கோயில்:

அருள்மிகு  செவ்வாய் இஸ்தலம் என்பதால், செவ்வாய் தோஷங்கள் உள்ளவர்கள் இந்த இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா

அருள்மிகு வைத்தீஸ்வரன் கோயில் –  தீராத நோய்களுக்கு:

செவ்வாயின் அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார்.
முத்துக்குமரன் சன்னதியில் படைக்கப்படும் சந்தனம், அனைத்து நோய்களையும் குணமாக்கும் என்பது ஐதீகம்.

வைத்தீஸ்வரன் கோயில் பரிகாரம்:

வைத்தீஸ்வரன் கோயில் பரிகாரம்: செவ்வாய் கிழமையின் போது அதிகாலை இந்த ஸ்தலத்திற்கு வந்து திருக்குளத்தில் நீராடி, பின்பு உடுத்திய உடையை அங்கேயே விட்டுவிட்டு, புதிய உடையை உடுத்தி கொண்டு, இங்கு இருக்கும் விநாயகர், செவ்வாய், சிவன், அம்பாள் என்று அனைத்து தெய்வத்தையும் வழிப்பட்டு வர அனைத்து தோஷங்களும் நீங்கும்.

மூலஸ்தலமான அங்காரகன் பிரகாரத்திற்கு சென்று பால் அபிஷேகம், பஞ்சாமிருத அபிஷேகம், திருநீர் அபிஷேகம் மற்றும் அங்காரகனுக்கு பிடித்த துவரை சாதம் செய்து நெய்வேத்தியம் செய்து, யாருக்கு தோஷம் உள்ளதோ அவர்கள் கைகளால் பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை அளிக்க செவ்வாய் தோஷம் நீங்கும்.

வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோஷியம்:

அதே போல் பாரம்பரிய நாடி ஜோஷியத்திற்கு பெயர் பெற்றது இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவில். அகத்தியர் அருளிய நாடி ஜோஷியத்தை நம்பி இந்த கோவிலுக்கு வந்து, பக்தர்கள் தங்களது எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.

மேலும் இந்த உலகில் உள்ள எல்லா மக்களையும் வசீகரிக்க கூடிய சக்தி இந்த ஆலயத்திற்கு உள்ளதாம்.

நாடி ஜோஷியம் பார்த்து பலன் பெற்றவர்களும் உள்ளனராம்.

இந்த கோயிலிற்கு சுமார் 5000 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அருள்மிகு வைத்தீஸ்வரன் கோயில் – பூஜை:

ஆறு கால பூஜை, அர்த்தசாம பூஜையின் போது செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனைப் புனுகு காப்பு தரிசனம் என்பர்.

வைத்தீஸ்வரன் கோவில் நடை திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடை திறக்கப்படும்.

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை  திறக்கப்படுகிறது.

வைத்தீஸ்வரன் கோயில் செல்லும் வழி:

திருச்சி வழியாக வரும் பக்தர்கள் மயிலாடுதுறை வழியாக சென்றடையலாம்.

சென்னை வழியாக வரும் பக்தர்கள் புதுசேரி மற்றும் சிதம்பரம் வழியாக இந்த கோயிலுக்கு வர முடியும்.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement