வீட்டில் அதிர்ஷ்டம் பெருக ஆடிப்பெருக்கு என்று மறக்காமல் இதை மட்டும் வாங்குங்க..!

Advertisement

வீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்

நம்முடைய வீட்டில் என்ன தான் பல வகையான பரிகாரம் மற்றும் மந்திரங்களை செய்தாலும் கூட சம்பாதிக்கும் பணம் முழுவதும் வீட்டில் தங்காமல் செலவாகிக்கொண்டே போகிறது என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் செலவாகி கொண்டே போனால் கஷ்டமாக தான் இருக்கும். இவ்வாறு இருந்தால் வீட்டில் அதிர்ஷ்டம் என்பது நிலைக்காமல் போய்விடும் நிலைமை தான் ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் அனைவருக்கும் ஆடி 18 ஆனது ஒரு சிறப்பான நாளாக வரப்போகிறது. ஏனென்றால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருக ஆடிப்பெருக்கில் என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.

ஆடிப்பெருக்கு தேதி, நேரம் மற்றும் வழிபாட்டு முறை பற்றி தெரியுமா 

ஆடி 18 அன்று என்ன செய்ய வேண்டும்:

நம்முடைய வீட்டில் செல்வம் மற்றும் அதிர்ஷ்டமானது சேர வேண்டும் என்று ஆடி 18 அன்று முக்கியமான சில பொருட்களை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். அத்தகைய பொருட்கள் என்னென்ன என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பால்:

 ஆடி 18 அன்று என்ன செய்ய வேண்டும்

பசும் பால் என்பது நம்முடைய வீட்டில் அன்றாட தேவைக்காக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. இத்தகைய பசும் பால் ஆனது ஆன்மீகத்தின் படி தெய்வங்களுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு என இத்தகைய நாட்களில் வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வம் நிலைத்து இருக்கும் என்பது ஐதீகம்.

ஆகையால் நாளை ஆடி 18 அன்று உங்களால் முடிந்த அளவு பசு மாட்டிடம் இருந்து கிடைக்கக்கூடிய பாலினை பூஜை அறையில் வைத்து வழிபடுவதன் மூலம் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும் என்று கூறப்படுகிறது.

செவ்வாழை பழம்:

செவ்வாழை பழம்

பொதுவாக தெய்வங்களுக்கு வழிபாடு செய்யும் போது பூவம் வாழைப்பழத்தினை வாங்கி வைத்து தான் வழிபடுவார்கள்.

ஆனால் ஆடிப்பெருக்கு என்று 2 செவ்வாழை பழத்தினை வாங்கி பூஜை அறையில் வைத்து மஹாலட்சுமியினை வழிபடுவதன் மூலம் வீட்டில் கஷ்டம் இல்லாமல் செலவம் பெருகும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மஞ்சள் & குங்குமம்:

ஆடி 18 பெருக்கு

அதேபோல் ஆடிப்பெருக்கு அன்று குங்குமம் மற்றும் மஞ்சள் பலகை இந்த இரண்டினையும் வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் வீட்டிற்கு மஹாலட்சுமியின் அம்சம் ஆனது பொருந்தி கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் நீங்கள் பண வரவு அதிகரிக்கக்கூடும் என்பது ஆன்மீகத்தில் உள்ள ஐதீகம்.

ஆகவே ஆடிப்பெருக்கு என்று மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி வழிபாடு செய்யுங்கள்.

ஆடி மாத அமாவாசைகள் 2-ல் எந்த அமாவாசை உகந்தது…

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement