Aadi Perukku Valipadu Murai | ஆடிப்பெருக்கு வழிபாடு
ஆங்கில வருடத்தில் எப்படி 12 மாதங்கள் இருக்கிறதோ, அதே மாதிரி தமிழ் வருடத்திலும் மொத்தமாக 12 மாதங்கள் உள்ளது. இந்த 12 மாதங்களில் ஆடி மாதமும் ஒன்றாக உள்ளது. ஆடி மாதத்தில் பெரும்பாலும் அதிகமாக சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது. இத்தகைய நடைமுறையானது காலம் காலமாக நடந்து வரும் ஒரு சம்பிரதாயமாக உள்ளது. ஆனால் இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஆடி 18-ஆம் தேதி அன்று மக்கள் அனைவராலும் தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது. ஆகவே இத்தகைய ஆடிப்பெருக்கு எதனால் கொண்டாடப்பட்டு வருகிறது என்றும், இதனின் முக்கியத்துவம் மற்றும் வழிபாட்டு முறையினை பற்றியும் தெளிவாக பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
ஆடிப்பெருக்கு எப்போது 2024..? தேதி மற்றும் வழிபடும் நேரம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!
ஆடிப்பெருக்கின் முக்கியத்துவம்:
ஆடி மாதத்தில் வரக்கூடிய 18-ஆம் நாளினை தான் நாம் அனைவரும் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடி வருகிறோம். இந்த ஆடிப்பெருக்கிற்கு பதினெட்டாம் பெருக்கு என்ற மற்றொரு பெயரும் உள்ளது.
இத்தகைய ஆடி மாதம் ஆனது தமிழகத்தில் பருவமழை தொடக்கித்தினை குறிக்கிறது. இந்த பருவமழையினாலும், அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரினாலும் ஆறுகளில் தண்ணீர் ஆனது பெருக்கெடுத்த வர ஆரம்பிக்கும்.
இவ்வாறு நீர்வரத்து அதிகமாகி வரும் தண்ணீரை வைத்து தான் விவசாய மக்கள் குருவை மற்றும் சம்பா சாகுபடி விவசாய முறையினை செய்கிறார்கள். இப்படிப்பட்ட நன்மையினை அளிக்கும் காவேரி தாய்க்கு நன்றி கூறும் விதமாகவும், விவசாயம் நல்ல முறையில் நடந்து விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என்று தான் தமிழகம் முழுவது ஆடிபெருக்கு கொண்டாப்பட்டு வருகிறது. இதுவே பதினெட்டாம் பேரின் முக்கியத்துவம் ஆகும்.
ஆடி மாத அமாவாசைகள் 2-ல் எந்த அமாவாசை உகந்தது…
ஆடி 18 வழிபாடு:
ஆடி 18-ஆம் நாளன்று ஆறு மற்றும் ஏரிகளில் அரிசி மாவினால் கோலமிட்டு, மணல் மற்றும் மஞ்சளால் பிள்ளையர் பிடித்து அதில் அருகம்புல்லினை குற்றி வைக்க வேண்டும். அதன் பிறகு சர்க்கரை பொங்கல் மற்றும் பச்சை அரிசியில் வெல்லம் கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வாழை இலையில் அனைத்து வகையான பழங்கள், மஞ்சள், தாலிக்கயிறு, வெற்றிலை பாக்கு மற்றும் பூ என இவை அனைத்தும் வைத்து சூடம், பத்தி மற்றும் சாம்பிராணி போட்டு காவிரி அன்னையினை வணங்குகிறார்கள்.
மேலும் இவ்வாறு வழிபாடு செய்த முடித்த பிறகு திருமணம் ஆன மற்றும் கன்னிப் பெண்கள் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மஞ்சள் கயிற்றினை கழுத்தில் கட்டிக் கொள்கிறார்கள்.
அதேபோல் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு ஆடி 18-ஆம் நாளன்று தாலி பிரித்து கோர்க்கும் விழாவும் நடத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய முறையில் தான் தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான ஆடிப்பெருக்கு ஆனது ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி அன்று வருகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |