Aadi 18 Perukku in Tamil
ஆடி மாதத்தில் அனைவரும் எதிர்பார்க்க கூடிய இரண்டு முக்கியமான நிகழ்வுகள் உள்ளது. அதில் ஒன்று ஆடிப்பூரம், மற்றொன்று ஆடி பெருக்கு. அந்த வகையில் நம்மில் பலருக்கு இதனுடைய சிறப்பு என்னவென்றும், எதனால் இதனை நாம் கொண்டாடிகிறோம் என்றும் தெரிவது இல்லை. ஆகவே இன்று ஆடிப்பெருக்கு பற்றியும் அது எப்போது வருகிறது என்பதை பற்றியும் அதனை நாம் எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற அனைத்து விதமான தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
ஆடி மாத அமாவாசைகள் 2-ல் எந்த அமாவாசை உகந்தது…
ஆடிப்பெருக்கு என்றால் என்ன..?
வருடங்கள் தோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழாவானது தமிழாக மக்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழில் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதாவது ஆடி மாதத்தில் தான் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் ஆனது பெருக்கெடுத்த வரும்.
இத்தகைய தண்ணீரை பயன்படுத்தி தான் சம்பா நடவு விவசாயத்தை மக்கள் செய்வார்கள். ஆகையால் ஆடி 18-ஆம் தேதி காவிரி தாயினை கொண்டாடடும் வகையில் ஆடி 18-ஐ சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.
ஆடி 18 2023 English Date:
தமிழ் மாதத்தில் ஆடி 18-ஆம் தேதி ஆங்கில மாதம் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி அன்று வியாழக்கிழமையில் ஆடிப்பெருக்கு ஆனது வருகிறது.
ஆடிப்பெருக்கு நல்ல நேரம்:
- காலை நல்ல நேரம் 06:02 AM
- மாலை நல்ல நேரம் 07:04 PM
ஆடிப்பெருக்கில் பெண்கள்:
ஆன்மீக ரீதியாக பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று பார்வதி தேவையினை வழிபடுவார்கள். அதாவது ஆடிப்பெருக்கு நன்னாளில் மஞ்சள் மற்றும் ஆற்று மண்ணால் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள்.
அதன் பிறகு காதோலை கருகமணி, பழங்கள், தாலி கயிறு, மஞ்சள் மற்றும் பூ, அரிசி, சர்க்கரை பொங்கல் என இவற்றை எல்லாம் வைத்து வழிபட்டு விட்டு திருமணம் ஆனா பெண்கள் கழுத்தில் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்தை மாற்றி புதிய கயிற்றில் அணிந்து கொள்வார்கள்.
ஆடி 18 அன்று பெண்கள் கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |