ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய பொருட்கள் | What to Buy on Aadi Perukku in Tamil
ஆடிப்பெருக்கு தமிழரின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று. இயற்கை நமக்கு வழங்கும் நீர் ஆதாரத்திற்கு நன்றி கூறி காவிரி அன்னையை வழங்கும் ஒரு நன்நாளாக ஆடி 18 கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் எந்த ஒரு சுபகாரியங்களும் செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று அனைத்து சுபகாரியங்களும் செய்யலாம். அதுவும் விவசாயம் செழிக்க ஆடி 18 அன்று அம்மனை வழிபட்டுவிட்டு பட்டம் தெளித்தால் விவசாயம் செழிக்கும். ஆடி பெருக்கு அன்று விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரத்திற்கு நன்றி கூறவும் அற்புதமான நாள், அந்த நன்னாளில் பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆடிபெருக்கு என்ற அதன் பெயரிலே பெருக்கு இருப்பதால் அன்று பொருள்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
ஆடி 18 அன்று வாங்க வேண்டிய பொருட்கள்:
ஆடி 18 அன்று தங்கம் வாங்கலாமா? என்று உங்களில் பலருக்கு சந்தேகம் வரும். கண்டிப்பாக தங்கம் வாங்கித்தானாக வாங்க வேண்டும் என்றால் வாங்கலாம். ஆனால் தங்கம் வாங்கினால் மட்டும் தான் செல்வம் பெருகும் என்று அர்த்தம் இல்லை. உங்களின் பொருளாதார சூழலுக்கு தகுந்தவாறு நீங்கள் வாங்கும் பொருள் இருக்கலாம்.
உங்கள் வீட்டில் தங்கம், வெள்ளி வாங்கும் வசதி இல்லாவிட்டால் அதற்கு இணையாக மங்களம் அருளக்கூடிய மிக எளிதாக கிடைக்கக்கூடிய இரண்டு பொருட்களை வாங்கி வழிப்பட்டால் போதும் உங்கள் வாழ்வு மகிழ்ச்சி, செல்வம் நிறைந்ததாக இருக்கும்.
செல்வம் குறையாமல் இருக்க ஆடி பெருக்கு அன்று கட்டாயம் இதை செய்யுங்க..
ஆடி 18 அன்று பூஜையில் வைக்க வேண்டிய பொருட்கள்:
செல்வம் பெருக ஆடி பெருக்கில் வாங்க வேண்டிய பொருட்கள்
குண்டு மஞ்சள்:
மஞ்சள் மகாலட்சுமியின் ஸ்வரூபமாகக் கருதப்படுகிறது. மங்களத்தை அருளும் மஞ்சள் தங்கத்திற்கு இணையானது. ஆடிப்பெருக்கு அன்று மஞ்சள் வைத்து வழிப்பட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும். பழங்காலம் முதல் தாலி மஞ்சளில் தான் உபயோகப்படுத்தப்படுகிறது.
உப்பு:
உப்பு, மகாலட்சுமி மற்றும் குபேரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் ஆடிப்பெருக்கு அன்று கல் உப்பு வாங்கி, அதனை பூஜை அறையில் வைத்து வணங்கினால் செல்வம் பெருகும்.
செல்வம் பெருக ஆடி பெருக்கு அன்று இந்த இரண்டு பொருட்களை வாங்கினால் போதும்.
ஆடி 18 அன்று பெண்கள் கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்
நமக்கு என்றென்றும் உணவு வழங்ககூடிய இயற்கை அன்னையை வணங்க ஆடி 18 கொண்டாடப்படுகிறது. உங்கள் வீட்டின் அருகில் ஆறு போன்ற நீர் ஆதாரங்கள் இருந்தால் அவற்றில் சென்று வழிபடலாம். இல்லையென்றால் உங்கள் வீட்டின் பூஜை அறையிலே சுத்தமான தண்ணீரில் சிறிது மஞ்சள் கலந்து அதில் பூக்கள் இட்டு, இந்த கால நிலையில் கிடைக்க கூடிய நாவல்பழம், கொய்யா போன்ற எளிதாக கிடைக்கக்கூடிய பழங்கள், மஞ்சள் மற்றும் உப்பு வைத்து வழிப்பட்டால் சகல செல்வமும் பெருகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |