ஆடி அமாவாசை வழிபடும் முறை | Aadi Amavasai Valipadu Murai | ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யும் முறை
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடி அமாவாசை அன்று எப்படி வீட்டில் வழிபட வேண்டும் (Aadi Amavasai Valipadu Murai) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதத்திலும் தை மாதத்தில் வரும் அமாவாசையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். மற்ற மாதங்களில் வரும் அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்தால் மறைந்த நம் முன்னோர்களில் யார் பெயரை சொல்லி கொடுக்கின்றோமோ அவருக்கு மட்டுமே சென்றடையும். ஆனால், ஆடி அமாவாசையில் அன்று கொடுக்கப்படும் தர்ப்பணம் தந்தைவழி மற்றும் தாய்வழி முன்னோர்களை சென்றடையும். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது ஆடி அமாவாசை.
ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம், சொறிமுத்து அய்யனார் கோயில் போன்ற தளங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடுவார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 04 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் வீட்டில் ஆடி அமாவாசை வழிபாடு செய்ய வேண்டும். எனவே, அதனை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
ஆடி அமாவாசை வழிபாடு | Aadi Amavasai Valipadu:
- ஆடி அமாவாசை அன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும். ஆடி அமாவாசை அன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், வீட்டில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். வீட்டில் குலதெய்வத்திற்கு என்று ஒரு விளக்கு ஏற்றி சுவாமிக்கு பூ பொட்டு வைத்து, சாம்பிராணி போட்டு வழிபட வேண்டும். பூஜை துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்க முன்பாக வீட்டின் முன் வாசல் கதவை அடைத்து விட்டு, சாம்பிராணி புகையை வீடு முழுவதும் காட்ட வேண்டும்.
- குலதெய்வத்தை நினைத்து, உங்களுக்கு இருக்கும் அணைத்து கஷ்டங்களும் தீர வேண்டும் என்று பிராத்தனை செய்ய வேண்டும். இதுபோன்று நீங்கள் ஆடி மாதம் முழுவதும் செய்யலாம். அதேபோல், ஆடி அமாவாசை அன்று இரவு 10 மணிக்கு மேல் பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல விதமான பொருட்களால் அபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் சாத்தி, அந்த தெய்வத்திற்குரிய அஷ்டோத்திரம் படித்து, சர்க்கரை பொங்கல் போன்ற ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து சாம்பிராணி காட்டி வழிபட வேண்டும்.
வீட்டில் என்றும் செல்வம் செழிக்க ஆடி அமாவாசை அன்று வீட்டின் நிலைவாசலில் இதை மட்டும் வையுங்க..!
ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யும் முறை | Aadi Amavasai Tharpanam:
- மற்ற அமாவாசை நாட்களில் ஆடி அமாவாசை அன்று ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, வீட்டிற்கு வந்து வழிபாடு செய்து காகத்திற்கு முன்னோர்களுக்கும் படையல் இட்டு அதன் பிறகு நாம் சாப்பிடுவோம். அதற்கு பதிலாக, ஆடி அமாவாசை அன்று அந்தரணர்களை வீட்டிற்கு அழைத்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
- ஒற்றை பிராமணராக இல்லாமல், நன்கு வேத மந்திரங்களை ஓதக்கூடிய இரண்டு பிராமணர்களை வீட்டிற்கு வரவழைத்து வேத மந்திரங்கள் சொல்லி, 21 தலைமுறையை சேர்ந்த முன்னோர்களுக்கும் திதி கொடுக்கலாம். தாய்வழி 21 தலைமுறையினருக்கும், தந்தை வழி 21 தலைமுறை முன்னோர்களுக்கும் என மொத்தம் 42 பிண்டங்கள் வைத்து, தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்.
- ஒரு பிராமணர் 21 பிண்டங்கள் என்ற கணக்கில் மொத்தம் 42 பிண்டங்கள் பிடித்து வைத்து மந்திரிங்கள் சொல்லி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதாவது, தந்தைவழி முன்னோர்களுக்கு 21 பிண்டங்கள் எனவும், தாய்வழி முன்னோர்களுக்கு 21 பிண்டங்கள் என மொத்தம் 42 பிண்டங்கள் வைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் கொடுத்த பிறகு, 42 பிண்டங்களை எடுத்துக்கொண்டு பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும். இதனுடன் சேர்த்து பசுவிற்கு அகத்திக்கீரையம் கொடுக்க வேண்டும்.
- பகல் 1 மணி முதல் 1 மணிக்குள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நம்மால் இயன்ற 10 பேருக்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.
- இதுபோன்று, ஆடி அமாவாசை அன்று வீட்டில் வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுத்தீர்கள் என்றால், ஒரு வருடத்திற்குள் உங்கள் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும். குடுமப்த்தில் ஒற்றுமை, தொழில் வளர்ச்சி என அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.
ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்.?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |