ஆடி அமாவாசை சிறப்பு தெரியுமா?
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள் தினம்தோன்றும் ஒவ்வொரு விஷயத்தை பற்றி கற்றுக்கொண்டு இருப்போம். அதெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். ஆனால் தானாகவே ஒரு விஷயத்தை பற்றி கேட்டோம் என்றால் அது எதற்கு உனக்கு வேலையை பார் என்பார்கள். காரணம் ஒன்று அவர்களுக்கு தெரியாமல் இருக்கும் இல்லையென்றால் தெரியவேண்டாம் என்று யோசிப்பார்கள். அப்போ இருந்த காலகட்டத்தில் வீட்டில் ஒன்று சொன்னால் சரி என்று சொல்வார்கள் ஆனால் இப்போது இருக்கும் பிள்ளைகளிடம் ஒன்று சொன்னால் அதற்கான முழு விவரங்ககளை தெரிந்தால் மட்டுமே அதை செய்வார்கள் இல்லையென்றால் நமக்கு அவர்கள் தெரிந்துகொண்ட விஷயத்தை பற்றி நமக்கு சொல்வார்கள்.
எது எப்படியோ வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆடி அமாவாசை பெரியளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள் அது மட்டும் ஏன் அதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம் வாங்க உங்களுக்கும் ஆடி அமாவாசை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தால் முழுமையாக இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
ஆடி அமாவாசை என்றால் என்ன?
அமாவாசை என்றால் அறிவியல் ரீதியாக ஒன்று சொல்வார்கள். ஆன்மீக ரீதியாக ஒன்று சொல்வார்கள். என்ன தான் உலகம் கணினி உலகமாக மாறி வந்தாலும் ஆன்மீகத்தை அதிகம் நம்புவார்கள் நாம் வீட்டில் இருக்கும் முன்னோர்கள் அல்லது ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்கள் அதிகம் நம்புவார்கள். அந்த வகையில் ஆன்மீகம் அமாவாசை பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாங்க..
அமாவாசை என்றால் நம் முன்னோர்களை வழிபடக்கூடிய நாளாக இருக்கிறது. அதிலும் மிகவும் முக்கியமாக ஆடி அமாவாசை போன்ற சில முக்கிய அமாவாசைகளை மட்டும் சிறப்பாக வழிபடுவார்கள். ஏனென்றால் அந்த அமாவாசையில் மட்டும் தான் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு செல்லும் என்பார்கள் அதனால் அதனை விமர்சியாக செய்வார்கள்.
மகாளய அமாவாசை வழிபாடு |
பித்ரு தோஷம் என்றால் என்ன?
அமாவாசை என்றால் நாம் ஏன் முன்னோர்களை நினைத்து பார்க்க வேண்டும் என்று யோசிப்பீர்கள். நாம் வீட்டில் எப்போதும் சண்டை பிரச்சனைகள், தொழில் முன்னேற்றம் அடையாமல் போவது பண வளர்ச்சி, தொட்ட காரியங்கள் துவங்காது. சுபநிகழ்ச்சிகள் ஏற்படாது போன்ற தடைகள் வந்துகொண்டே இருக்கும். அதற்கெல்லாம் காரணம் பித்ரு சாபம் என்பார்கள். அது என்ன பித்ரு சாபம் என்று நினைப்பீர்கள். நமக்கு நல்லது செய்வது தெய்வம் அவர்களை நல்லது செய்யவிடாமல் தடுப்பது அதாவது இடையில் நின்றுகொண்டாள் தெய்வங்கள் வீட்டிற்க்குள் செல்லாது. அப்படி தடுத்தால் நமக்கு நன்மை ஏற்காது அதனால் பித்ருவின் சாபத்திற்கு ஆளாகுவீர்கள். பித்ரு என்றால் நம் முன்னோர்கள் தான்.
நம் நல்லா இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் நம்மை அவர்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்கள் அவர்களை அமாவாசை அன்று நினைத்தது அவர்களுக்கென்று தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் தெய்வங்களுக்கு வழிவிட்டு நம்மை எல்லா துயரத்திலிருந்து காக்க தெய்வங்களுக்கு வழிகொடுப்பார்கள். அதனால் அமாவாசை விமர்சியாக கொண்டாடுவார்கள்.
ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்?
இந்த ஆடி அமாவாசை அன்று என்ன செய்யவேண்டும் என்றால் தாய் இல்லாதவர்கள் தகப்பனை இழந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், பிள்ளை இல்லாதவர்கள் போன்று யார் இல்லையோ அவர்கள் இந்த தர்ப்பணம் செய்யவேண்டும்.
தர்ப்பணம் செய்ய வேண்டும் நினைப்பவர்கள் அனைவரும் காலையில் குளித்துவிட்டு விளக்கை ஏற்றி சாமியை கும்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றால் அங்கேயே என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். செய்துவிட்டு இரண்டு அல்லது மூன்று பேருக்கு உங்களால் முடித்த அளவுக்கு அன்னதானம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வரலாம். அப்படி இல்லை என்னால் கோவிலுக்கு செல்லமுடியவில்லை என்றால் வீட்டிலேயே செய்யலாம் வாங்க அதையும் பார்க்கலாம்.
ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யும் முறை:
வீட்டில் தர்ப்பணம் கொடுப்பவர்கள் மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் எல் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஒரு தட்டில் படத்தில் உள்ளதை போல் மனைவி தண்ணீர் ஊற்ற நீங்கள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையிலிருந்து விரதமாகத்தான் இருக்க வேண்டும். அதே போல் தண்ணீர் ஊற்றுபவர்கள் விரதமாக இருக்க கூடாது அவர்கள் வெறும் வயிற்றில் அதை செய்யகூடாது. தர்ப்பணம் கொடுக்கும் போது யாருக்கு தர்ப்பணம் செய்கிறீர்களோ அவர்களில் பெயர்களை சொல்லி எல் தண்ணீர் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் முன்னோர்கள் அனைவருக்கும் என்று சொல்லி அல்லது நினைத்துக்கொண்டு இதனை செய்யலாம். செய்து முடித்த பிறகு அன்னதானம் மிகவும் முக்கியமானது நிச்சயம் அன்னதானம் செய்யவேண்டும்.
பிறகு வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு பிடித்ததை செய்து முன்னோர்களை நினைத்து சாம்பிராணி போடவும். உங்களை அவர்கள் ஆசீர்வதிப்பார்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |