ஆடி கிருத்திகை 2024 எப்போது.? தேதி மற்றும் நேரம் இதோ..!

Advertisement

ஆடி கிருத்திகை 2024 நேரம் | Aadi Krithigai 2024 Date and Time | ஆடி கிருத்திகை தேதி

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு 2024 ஆடி கிருத்திகை எப்போது வருகிறது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஆடி மாதம் என்றாலே மிகவும் விசேஷமான மாதம் ஆகும். இம்மாதத்தில், வரும் முக்கியமான நாட்களில் ஒன்று தான் ஆடி கிருத்திகை. எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், இந்த ஆண்டு ஆடி கிருத்திகை எப்போது வருகிறது எப்போது.? என்பதை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

ஆடி கிருத்திகை என்பது தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் ஆகும். இந்நாளில், முருகனுக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால், நற்பலன்களை பெறலாம். அதிலும் குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும். இப்படி பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடிய ஆடி கிருத்திகை எப்போது.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Aadi Krithigai Date and Time in Tamil | ஆடி கிருத்திகை தேதி மற்றும் நேரம் 2024:

போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளான முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஆகும். இந்நாளில் முருகனை வணங்கி விரதம் இருந்து வழிபட்டால் ஆரோக்கியமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

ஆடி கிருத்திகை தேதி

 ஆடி கிருத்திகை இந்த ஆண்டு 2024 ஜூலை 29 ஆம் தேதி (ஆடி 13 ஆம் தேதி) திங்கட்கிழமை அன்று வருகிறது. கிருத்திகை நட்சத்திரம் ஜூலை 29 மதியம் 02:41 PM மணிக்கு தொடங்கி மறுநாள் ஜூலை 30 ஆம் தேதி மதியம் 01:40 PM மணிக்கு முடிவடைகிறது.  

27 நட்சத்திரங்களில் கிருத்திகை நட்சத்திரம் 3வது நட்சத்திரமாகும். ஆடி மாதத்தில் இந்த நட்சத்திரத்தால் ஆளப்படும் நாள் ஆடி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது.

ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்து வழிபடுவது எப்படி.?

கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நட்சத்திரம் என்பதால் இந்நாள் மிகவும் மங்களகரமான நாளாகவும் முருகனை வழிபடுவதற்கு சிறப்பு வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.

ஆடி கிருத்திகை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் முருகன் சிலைக்கு பால் தேன், சந்தனம் மற்றும் புனித நீர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இந்நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

கிருத்திகை நட்சத்திர பெயர்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement