ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்து வழிபடுவது எப்படி.?

Advertisement

Aadi Krithigai Viratham in Tamil | ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி.?  என்பதை கொடுத்துள்ளோம். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமாக வரும் ஆடி மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கிறது. இம்மாதம் அணைத்து கடவுள்களையும் வணங்குவதற்கு உகந்த மதமாக இருக்கிறது. ஆடி மாதத்தில் வரும் முக்கியமான நாட்களில் ஒன்று தான் ஆடி கிருத்திகை.

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆனது ஆங்கில தேதிக்கு ஜூலை 20 ஆம் தேதியம் தமிழ் தேதிக்கு ஆடி 13 ஆம் தேதியும் வருகிறது. ஆடி கிருத்திகை என்பது முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். இந்நாளில், முருகனுக்கு விரதம் இருந்து வழிப்பட்டால் முருகனின் வளமான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கான ஆசியைப் பெறுவார்கள். எனவே, இந்நாளில் முருகனின் அருளை பெற எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். படித்து தெரிந்துகொண்டு விரதம் இருந்து முருகனின் ஆசியை பெறுங்கள்.

ஆடி கிருத்திகை 2024 எப்போது.? தேதி மற்றும் நேரம் இதோ..!

Aadi Krithigai Viratham Procedure in Tamil:

ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி

  • ஆடி கிருத்திகை முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் உள்ள முருகனின் படம் மற்றும் பூஜை சாமான்களை கழுவி துடைத்து செய்து தூய்மையாக வைக்க வேண்டும்.
  • ஆடி கிருத்திகை அன்று சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள முருகன் படத்திற்கு மாலை மலர்களை அணிவித்து விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைக்க வேண்டும்.
  • அடுத்து அருகில் உள்ள முருகப் பெருமானின் ஆலயத்திற்கு சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும். வழிபடும்போது, கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகன் பதிகங்களை உச்சரிக்க  வேண்டும். மேலும், அன்றைய நாள் முழுவதும் வீட்டில் முருகன் பாடல்களை ஒலிக்க செய்ய வேண்டும்.
  • அன்றைய நாள் முழுவதும் உணவு ஏதும் அருந்த கூடாது. உடல் நலம் பாதிப்புக்குள்ளவர்களாக இருந்தால் கொஞ்சமாக பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். பின்னர் மாலை நேரத்தில் வீட்டில் பூஜைகளை முடித்துவிட்டு சைவ உணவுகளை சாப்பிட்டு விரதங்களை முடித்து கொள்ளலாம்.
  • அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபாடு செய்பவர்களாக இருந்தால், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி விரதத்தை முடிக்கலாம்.

ஆடி கிருத்திகை விரத பலன்கள்:

  • ஆடி கிருத்திகை என்பது, போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளான முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஆகும். இந்நாளில், மனமுருகி வழிபட்டால் வளமும், ஆரோக்கியமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
  • திருணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் நடக்கும், குழந்தை வரம் கிட்டும்.
  • எனவே, ஆடி கிருத்திகை அன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து மனமுருகி வழிபாடு செய்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீர்ந்து நல்வாழ்வு கிடைக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement