கோடி கடனும் எளிதில் நீங்க ஆடி செவ்வாய் வளர்பிறை அஷ்டமி வழிபாடு.!

Advertisement

Aadi Matham Valipadu | வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

ஆடி மாதம் இறைவனை வழிபடுவதற்கு சிறந்த மாதமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அம்மனுக்கு ஆடி மாதம் மிகவும் சிறந்தது. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி மற்றும் ஆடி ஞாயிறு போன்ற நாட்களில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். முக்கியமாக ஆடி செவ்வாய் வளர்பிறை அஷ்டமியுடன் வருவதால் மிகவும் சிறப்பான நாளாக இருக்கிறது. இந்நாளில் சிவன் கோவிலுக்கு சென்று கால பைரவரை வணங்குவதன் மூலம் நமக்கு இருக்கும் பண கஷ்டம், மகிழ்ச்சியின்மை போன்றவை நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. எனவே, கஷ்டங்கள் நீங்க ஆடி செவ்வாய் வளர்பிறை அஷ்டமி அன்று வீட்டிலும் கோவிலிலும் வழிபடும் முறை பற்றி பின்வருமாறு காண்போம்.

ஆடி செவ்வாய் வழிபாடு:

ஆடி செவ்வாய் வளர்பிறை அஷ்டமி அன்று பெண்கள் அதிகாலையிலே எழுந்து தலை குளித்து பூஜை அறையில் அம்மனை நினைத்து ஒரு தீபத்தை ஏற்றி கொள்ளுங்கள்.

அதன் பின், பைரவர் படத்திற்கு ஒரு அகல் விளக்கு ஏற்றி செவ்வரளி பூ வைத்து கொள்ளுங்கள். அடுத்து நெய்வேத்தியமாக செவ்வாழை பழம் வைத்து மற்றும் தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.

வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

நீங்கள் கோவிலுக்கு போகும்போது சிகப்பு நிற மலர்களான செம்பருத்தி, செவ்வரளி, ரோஜா மற்றும் அபிஷேகத்திற்கு மஞ்சள், குங்குமம், பைரவருக்கு சிகப்பு நிற துணி போன்றவற்றை வாங்கி செல்லுங்கள்.

ஆடிப்பெருக்கு தேதி, நேரம் மற்றும் வழிபாட்டு முறை பற்றி தெரியுமா..?

சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள கால பைரவற்கு, 108 ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும் அல்லது 8 ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அர்ச்சனை செய்து 8 அஷ்டலக்ஷ்மியின் பெயரினை சொல்லி வழிபட வேண்டும்.

அடுத்ததாக, முதலில் இரண்டு புதிய அகல் விளக்கை எடுத்து கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி பஞ்சு திரிநூல் போட்டு விளக்கு ஏற்றுங்கள் அல்லது இஞ்சி தீபம் அல்லது சுக்கு தீபம் ஏற்றிக்கொள்ளுங்கள்.

சிறிய துண்டு இஞ்சியை துருவி எடுத்து செல்லுங்கள். அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு அதில் கொஞ்சம் துருவிய இஞ்சியை சேர்த்து விளக்கு ஏற்றுங்கள்.

 ஆடி செவ்வாய் வழிபாடு

இந்த மூன்று தீபங்களில் உங்களுக்கு விருப்பமான தீபத்தை ஏற்றி கால பைரவரை நினைத்து வழிபடும் போது உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

இந்த ஆடி செவ்வாய் வளர்பிறை அஷ்டமி அன்று உங்கள் கஷ்டங்களை கூறி வழிபடாமல் அதற்கு மாறாக உங்களுக்கு செல்வம் செழிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் போன்றவற்றை கூறி வழிபடுங்கள். ஏனென்றால் தேய்பிறை அஷ்டமி அன்று தான் நம் கஷ்டங்களை கூறி வழிபட வேண்டும். வளர்பிறை அஷ்டமி அன்று நமக்கு என்ன தேவையோ அதனை கூறி வழிபட வேண்டும்.

ஆடி 18 அன்று பெண்கள் கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement