ஆடிப்பெருக்கு எப்போது 2024..? தேதி மற்றும் வழிபடும் நேரம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

Aadi Perukku Date 2024 in Tamil | When is Aadi Perukku in 2024 in Tamil  | ஆடிப்பெருக்கு 2024 

ஆன்மிக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2024 ஆம் ஆண்டில் ஆடிப்பெருக்கு எப்போது வருகிறது.? (Aadi Perukku Date 2024 in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஆடி மாதம் ஆன்மீக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிமாதத்தில் வரக்கூடிய மிகவும் விசேஷம் வாய்ந்த நாள் ஆடிப்பெருக்கு ஆகும். ஆடி மாதம் 18 ஆம் தேதி அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இது, தமிழகத்தில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் பண்டிகை ஆகும்.

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் கூறுவார்கள். மேலும், கொம்பு தமிழ் பேச்சு வழக்கில் ஆடி நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில், நீர் நிலைகளுக்கு வழிபாடு செய்வார்கள். நீர் நிலைகளுக்கு பழங்கள், மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்வார்கள். இந்நாளில் தொண்டைக்கும் செயல்கள் அனைத்தும் பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம். எனவே, இந்த ஆண்டு ஆடி பெருக்கு எந்த கிழமையில் வருகிறது என்பதையும் வழிபடும் நேரம் பற்றியும் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

போதும் போதும் என்கின்ற அளவு பணம் சேர ஆடிப்பெருக்கு அன்று இதை மட்டும் செய்யுங்க போதும்..!

ஆடிப்பெருக்கு தேதி 2024 மற்றும் நேரம்:

ஆடிப்பெருக்கு தமிழ் மாதமான ஆடி 18 ஆம் தேதி அன்றும் ஆங்கில மாதமான ஆகஸ்ட் 03 ஆம் தேதி அன்றும் வருகிறது. அதாவது ஆகஸ்ட் 03 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது.

ஆடிப்பெருக்கு நல்ல நேரம் 2024:

காலை : 07.45 AM முதல் 8.45 AM வரை

மாலை : 04.45 PM முதல் 05.45 PM  வரை

ஆடிப்பெருக்கு தேதி 2024 மற்றும் நேரம்

ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் அம்மன் பார்வதி தேவியை வழிப்படுவார்கள். மாலை நேரங்களில் ஆற்றங்கரையில் பெண்கள் ஆடிப்பெருக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். கிராமப்புறங்களில் வயல்களில் விதை விதைத்து, நிலங்களுக்கு வழிபாடு செய்யும் வழக்கமும் உள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் நிலங்களுக்கு சென்று நிலங்களை உழுது அரிசி தானியங்கள் மற்றும் பழங்கள் வைத்து நிலங்களுக்கு தீபாராதனை காட்டி வழிப்படுவார்கள்.

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement