ஆடிப்பெருக்கு தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் 2024 | Aadi Perukku Thali Kayiru Matrum Neram 2024
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடிப்பெருக்கு அன்று தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம் எப்போது என்பதை (Aadi Perukku Thali Kayiru Matrum Neram 2024) பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். ஆடி பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடியின் (ஜூலை நடுப்பகுதியில்) 18 வது நாளில் கொண்டாடப்படும் விழா ஆகும். ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. மிகவும் மங்களகரமான நாள்.
இந்நாளில், பெண்கள் நீர் நிலைகளில் வழிபாடு செய்வார்கள். மேலும், வீட்டில் திருமணமான பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றி கொள்வார்கள். அப்படி தாலிக்கயிறு மாற்றும்போது நல்ல நேரம் பார்த்து தாலிக்கயிறு மற்ற வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் 2024 பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
செல்வம் பெருக ஆடி 18 அன்று இந்த பொருட்களை மறக்காமல் பூஜை அறையில் வைய்யுங்கள்.!
Aadi Perukku Thali Kayiru Matrum Neram 2024:
இந்த ஆண்டு 2024 ஆடிப்பெருக்கு/ஆடி 18 ஆம் பெருக்கு ஆகஸ்ட் 03 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. அன்று பிற்பகல் வரை புனர்பூசம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூசம் நட்சத்திரமும் வருகிறது. அன்றைய நாளில் நல்ல நேரம் என்று பார்த்தல் காலை, 07:45 AM முதல் 08:45 AM வரையும், மாலை 04:45 PM முதல் 05:45 PM வரையும் உள்ளது. எனவே, ஆடிப்பெருக்கு அன்று காலை 09 மணிக்குள் ஆடிப்பெருக்கு வழிபாட்டினை முடிக்க வேண்டும். அதேபோல், அந்த நேரத்திலேயே திருமணம் ஆன பெண்கள் தாலிக்கயிற்றினை மாற்றி கொள்ளலாம் என்றும் கூறபடுகிறது.ஆடிப்பெருக்கு நாளில், கன்னி பெண்கள் வழிபட்டால் நல்ல கணவர் அமைவார். அதுவே புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இவ்வாறு செய்வதால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் கிட்டும்.
ஆடிப்பெருக்கு தாலிக்கயிறு மாற்றும் முறை:
- முதலில் வீட்டில் பூஜை செய்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைக்க மறக்க கூடாது.
- தாலிக்கயிறு மாற்றும்போது கிழக்கு நோக்கி அமர்ந்து தான் தாலியை மாற்ற வேண்டும்.
- கணவர், சுமங்கலியாக இருக்கும் பெண்கள், மாமியார், அம்மா என இவ்வாறு வயதானவர்கள் வீட்டில் இருக்கும்போது தாலிக்கயிற்றை மாற்ற வேண்டும்.
- தாலிக்கயிறு மாற்றும் போது பாதியிலேயே எழுந்திருக்க கூடாது.
- அதன்பிறகு, பூஜை அறைக்கு சென்று வணங்கிவிட்டு தான் மற்ற வேலைகளை பார்க்க வேண்டும்.
- ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் 3பேர் அல்லது 5 பேருக்கு மங்கல பொருட்களை தானம் கொடுக்க வேண்டும்.
பெண்கள் தாலி மாற்றிய பின் பழைய கயிற்றை என்ன செய்யணுன்னு தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |