ஆடி பெருக்கு பெண்கள் தவிர்க்க வேண்டியவை
பொதுவாக தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்புக்குரியது. அதில் தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு பெற்றது. ஏனென்றால் இந்த மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு பெற்றது மற்றும் புதிதாக திருமணம் ஆகிருக்கும் பெண்களுக்கு தாலி பிரித்து கோர்ப்பார்கள். அதிலும் குறிப்பாக ஆடி 18-ம் தேதி அன்று பெண்கள் ஆற்றில் நீராடி இறைவனை வணங்குவார்கள். அன்றைய நாள் வழிபடுவதன் மூலம் திருமண தடைகள் நீங்கி வரன் அமையும், கணவனின் ஆயுள் கூடும், தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் வந்து முடியும். இப்படிப்பட்ட நாளில் பெண்கள் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
ஆடி 18-ம் பெருக்கு அன்று பெண்கள் தவிர்க்க வேண்டியவை:
கருப்பு ஆடை:
ஆடி 18 அன்று பெண்கள் கருப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். அன்றைய நாள் மங்களகரமான நிறத்தில் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிய வேண்டும். இல்லையென்றால் திருமண புடவையை அணிந்து கொள்ளலாம். மேலும் கை நிறைய வளையல் அணிந்து, மஞ்சள் பூசி கொண்டு அம்மனை வழிபட வேண்டும்.
எவ்வளவு பெரிய கடன் சுமையும் குறைய ஆடி முதல் செவ்வாயில் இதை மட்டும் செய்யுங்க..!
கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்:
ஆடி 18 அன்று கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அன்றைய நாள் தானத்திலே சிறந்த தானமான அன்னதானத்தை வழங்கலாம். பெண்கள் கட்டாயம் ஆடி 18 அன்று அன்னதானம் வழங்க வேண்டும்.
கசப்பு நிறைந்த உணவுகள்:
மகாலட்சுமி வாசம் செயயும் அந்நாளில் வீட்டில் கசப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சண்டை போட கூடாது:
அன்றைய நாள் வீட்டில் சண்டை போட கூடாது, வீடு ரொம்ப அமைதியாக இருக்க வேண்டும். முக்கியமாக பெரியவர்களிடம் சண்டை போட கூடாது. அதனால் அன்றைய தினம் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று அவர்களின் அருளை பெற வேண்டும்.
நெய் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்:
வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை உருக்காமல் இருப்பது நல்லது.
கடன் தொல்லை தீர ஆடி முதல் நாள் உப்பு ஜாடியில் இதை மட்டும் மறைத்து வைய்யுங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |