ஆடி பூரம் 2023 தேதி மற்றும் நேரம்

Advertisement

ஆடிப்பூரம் 2023 தேதி

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பண்டிகை சிறப்பு பெற்றது. அதில் குறிப்பாக தமிழ் மாதங்கள் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்தது. ஆடி மாதம் சிறப்பு பெற்ற மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் புதுமண தம்பதிகளுக்கு தாலி பிரித்து கோர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். பெண்களுக்கு உகந்த தினமான ஆடி 18 அன்று நீராடி கடவுளை வணங்குவார்கள். அது போல ஒவ்வொரு பூஜைக்கான நேரம் மற்றும் தேதி எல்லாம் அறிந்து கொள்ள  வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் இந்த பதிவில் ஆடிப்பூரம் தேதி மற்றும் நேரத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

ஆடிப்பூரம் முக்கியத்துவம்: 

ஆடி பூரம் ஆண்டாள் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் முக்கிய பண்டிகையாகும். இந்த திருவிழா லட்சுமி தேவியின் அவதாரமான ஆண்டாள் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆடி பூரம் தமிழ் நாட்காட்டியில் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது . ஆங்கில மாதத்தில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வரும்.

ஆடி பூரம் தமிழ்நாட்டின் நடக்க  கூடிய முக்கியமான திருவிழாவாக இருக்கிறது. இந்த பண்டிகை விஷ்ணு கோவில்களில் நடக்கும். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கடவுளை தரிசிக்கலாம்.

இன்றைய நாள் பஞ்சாங்கம் 

ஆடிப்பூரம் 2023 தேதி மற்றும் நேரம்:

2023 ஆண்டிற்கான ஆடிப்பூரம் (ஆடி 6 ஆம் தேதி) ஜூலை 22-ம் தேதி, சனிக்கிழமை வருகின்றது. இந்த நாளில் காலை 11.34 முதல் வழிபாடு செய்யலாம்.

ஆடி பூரத்தை தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

ஆடி பூராத்தை தரிசிப்பதால் தேவி மற்றும் ஆண்டாளின் அருள் கிடைக்கும்.

வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

தீய சக்திகள் உங்களை நெருங்காது.

உங்களின் துணையின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

ஆடி 18 அன்று பெண்கள் கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement