Aadi Pooram Tamil
தமிழ் மாதங்களில் வரக்கூடிய ஆடி மாதத்தினை அம்மனுக்கு உகந்த மாதம் என்று கூறுவார்கள். ஏனென்றால் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளி அன்று திருமணம் ஆனா பெண்கள் கோவிலுக்கு சென்று அல்லது வீட்டிலேயே மாங்கல்ய பாக்கியம் நீண்ட நாட்கள் கிடைத்து வீட்டில் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டி கொள்வார்கள். அதுமட்டும் இல்லாமல் ஆடி பூரத்தில் பெண்கள் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் என்பதையும் ஒரு வேண்டுகோளாக வைப்பார்கள். அந்த வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான ஆடி பூரம் ஆனது விரைவில் வர இருப்பதால் அன்று குழந்தை வரம் கிடைக்க என்ன மாதிரியான பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க நண்பர்களே..!
குழந்தை பேறு கிடைக்க ஆடிப்பூரம்:
ஆடிப்பூரத்து அன்று முதலில் நீங்கள் குளித்து விட வேண்டும். அதன் பிறகு உங்களுடைய வீட்டில் இருக்கும் பூஜை அறையினை சுத்தும் செய்து விடுங்கள்.
- கண்ணாடி வளையல்
- சர்க்கரை பொங்கல் (அ) பாயாசம்
- மரத்தால் ஆன பலகை
மேலே சொல்லப்பட்டுள்ள மூன்றினையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது பூஜை அறையில் இருக்கும் அம்மன் படத்தினை மரத்தால் ஆன பலகையில் வைத்து துடைத்து விட்டு பின்பு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைத்து விட்டு பூ வைய்யுங்கள்.
ஆடிப்பூரம் வழிபாடும் முறை:
நீங்கள் வாங்கி வைத்துள்ள கண்ணாடி வளையலை மாலை போட்டு செய்து வைத்து விடுங்கள். பின்பு சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசம் இதுபோன்ற ஏதாவது இனிப்பினை செய்யுங்கள்.
அதன் பிறகு மனதில் நினைக்கும் காரியம் நடக்க வேண்டும் என்று மனதார அம்மனை வேண்டி கொள்ளுங்கள்.
அடுத்து அந்த மரத்தால் ஆன பலகையில் திருமணம் ஆகி குழந்தை வரம் கிடைக்காமல் இருக்கும் பெண்ணை அதில் உட்கார வைத்து அப்பெண்ணுக்கு அம்மனுக்கு சூட்டிய வளையலை எடுத்து வளைகாப்பு போல் செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்து முடித்த பிறகு அந்த பெண்ணின் சேலையில் உள்ள முந்தியில் 1 தேங்காய், வாழைப்பழம் மற்றும் வெற்றிலை, பாக்கு என இவற்றை வைத்து அம்மனிடம் மீண்டும் ஒரு முறை வேண்டி கொள்ள வேண்டும்.
இத்தகைய பரிகாரத்தை செய்து முடித்ததோடு மட்டும் இல்லாமல் மருத்துவ ரீதியான அணுகு முறையினையும் மேற்கொண்டால் குழந்தை வரம் கிடைத்து விடும்.
ஆடி 18 அன்று பெண்கள் கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |