ஆடிப்பூரம் 2024 எப்போது.? தேதி மற்றும் நேரம் இதோ.!

Advertisement

ஆடிப்பூரம் 2024 தேதி | Aadi Pooram 2024 Date in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரம் எப்போது வருகிறது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஆடிப்பூர தினத்தில் தான் உமாதேவி அவதரித்ததாக புராண கதைகள் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் அம்மன் தோன்றினாள் என்று கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் விசேஷமான நாட்களில் ஒன்று தான் இந்த ஆடிப்பூரம். அம்பாளுக்கு உரிய நாளாகும்.

ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழா ஆகும். இந்நாள் அம்பாள் உருவெடுத்தாள். அதுமட்டுமில்லாமல், சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இப்படி சிறப்பு வாய்ந்த நாள் இந்த ஆண்டு 2024 எப்போது வருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வீட்டில் ஆடிப்பூரம் பூஜை செய்வது எப்படி.?

Aadi Pooram 2024 Date and Time in Tamil | ஆடிப்பூரம் 2024 தேதி மற்றும் நேரம்:

ஆடிப்பூரம் 2024 தேதி மற்றும் நேரம்

 இந்த ஆண்டு ஆடிப்பூரம் 2024 ஆங்கில தேதிக்கு ஆகஸ்ட் 07 ஆம் தேதியும், தமிழ் தேதிக்கு ஆடி 22 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் ஆகஸ்ட் 06 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 06:41 PM மணிக்கு தொடங்கி மறுநாள், ஆகஸ்ட் 07 ஆம் தேதி புதன்கிழமை இரவு 09:03 PM அன்று முடிவடைகிறது.  

எனவே, ஆடிப்பூரம் ஆகஸ்ட் 07 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம் 2024 அன்று நல்ல நேரம் எப்போது.?

காலை : 09:15 AM முதல் 10:15 AM வரை

மாலை : 04:45 PM முதல் 05:45 PM வரை

கெளரி நல்ல நேரம்:

காலை : 10:45 AM முதல் 11:45 AM வரை

மாலை : 04:45 PM முதல் 05:45 PM வரை

குளிகை நேரம்:

ஆடிப்பூரம் அன்று குளிகை நேரம் காலை காலை 10:30 AM முதல் 12:00 PM வரை இருக்கிறது.

வழிபாட்டிற்கு உகந்த நேரம் எது.?

 ஆடிப்பூரம் அன்று குளிகை நேரத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு ஆகும். அப்படி உங்களால் குளிகை நேரத்தில் வழிபாடு செய்ய முடியவில்லை என்றால் இராகு காலம் எமகண்டம் நேரத்தை தவிர்த்து விட்டு மற்ற நேரங்களில் வழிபாடு செய்யலாம்.  

ஆடிப் பூரத்தில் குழந்தை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement