நினைத்த காரியம் நடக்க ஆடிப்பூரத்தில் மறக்காமல் இதை செய்யுங்க..!

Advertisement

Aadi Pooram in Tamil

பொதுவாக தமிழ் மாதங்களில் வரக்கூடிய ஆடி மாதத்தில் பெரும்பாலும் யாரும் அதிகமாக சுப நிகழ்ச்சிகளை செய்ய மாட்டார்கள். அதேபோல் எந்த ஒரு புதிய முயற்சியினையும் செய்யவும் மாட்டார்கள்.  ஆனால் இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பூரம் மற்றும் ஆடி அமாவாசை ஆனது மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் ஆனது ஆடிப்பூரம். இத்தகைய ஆடிப்பூரத்தில் நாம் என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அது நிறைவேறும் என்று ஆன்மீகத்தில் கூறுவார்கள். அதனால் இன்றைய பதிவில் 22.07.2023 ஆடிப்பூரம் நாளாகிய இன்று பூஜை அறையில் என்ன செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

ஆடி 18 அன்று பெண்கள் கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்

ஆடிப்பூரம் அன்று:

ஆடிப்பூரம் அன்று முதலில் பூஜை அறையினை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் தலை குளித்து விட வேண்டும்.

  • மா இலை
  • ஏலக்காய் தூள்
  • பன்னீர் 
  • தாழம்பூ குங்குமம்
  • ஜவ்வாது 
  • எலுமிச்சை பழம்

இப்போது அம்மனுக்கு பூஜை செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

அதன் பிறகு அம்மன் படத்திற்கு பூ மற்றும் மஞ்சள் குங்குமம் வைத்து விளக்கேற்றி கொள்ளுங்கள். அடுத்து ஒரு தட்டில் எடுத்துவைத்துள்ள ஏலக்காய் தூள், பன்னீர், தாழம்பூ குங்குமம் மற்றும் ஜவ்வாது என இவை அனைத்தினையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆடிப்பூரம்

அடுத்து அத்தகைய பொருட்களை சிறிதளவு பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து பிள்ளையார் போல் பிடித்து தட்டில் வைத்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து அதே தட்டில் 3 எலுமிச்சை பழத்தினையும் வைத்து விடுங்கள்.

கடைசியாக மா இலையினை வீட்டின் நிலவாசலில் கட்டி விடுங்கள். அம்மனுக்கு பூஜை செய்வதற்கு ஏதோ ஒரு இனிப்பினை பிரசாதமாக செய்து வைத்து அம்மனை மனதில் நினைத்த காரியம் அனைத்தும் விரைவில் நடைபெற வேண்டும் என்று வழிபடுங்கள்.

அதேபோல் வழிபடும் போது ஸ்ரீ சக்தி ஓம் சக்தி என்ற மந்திரத்தினையும் கூறினால் நல்லது.

இவ்வாறு நீங்கள் வழிபடுவதன் மூலம் அம்மன் அருள் உங்களுடைய வீட்டிற்கு கிடைத்து வேண்டியது அனைத்தும் கைக்கூடும். மேலும் இதை செய்த கையோடு நினைத்தது நிறைவேறுவதற்கான முயற்சியினையும் செய்ய வேண்டும்.

ஆடிப் பூரத்தில் குழந்தை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement