ஆடிப்பூரம் மந்திரம் | Aadi Pooram Nantra in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளுமே சிறப்பான நாளாகும். அம்பிகையை வழிப்படுவதற்கு உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம் தான். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் தான் ஆண்டாள் அவதரித்தாள் என்று பல்வேறு புராண கதைகள் கூறுகின்றன. மற்ற மாதங்களை விட இந்த ஆடி மாதத்தில் செய்யக்கூடிய பரிகாரங்களுக்கும் வழிபாடுகளுக்கும் பலமடங்கு பலன்கள் கிடைக்கும்.
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பூரம் அன்று அணைத்து விதமான நன்மைகளையும் பெற சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
கேட்ட வரம் அளிக்கும் ஆடிப்பூரம் மந்திரம்:
பூரம் நட்சத்திரம் நமக்கு மாதம் மாதம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரம் நிறைந்திருக்கும் நாளில் தான் இந்த உலகத்தை படைத்தது காத்த உமாதேவி அவதரித்த நாள். அதுமட்டுமில்லாமல், சூடி கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அவதரித்த நாளும் இந்நாள் தான். எனவே, இந்த ஆடிப்பூரம் நாள் அம்மன் வழிப்பாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இந்நாளில், அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடத்துவார்கள். திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அம்மனுக்கு நடத்தப்படும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், அடுத்த வருடத்திற்குள் திருமணம் ஆகாதர்வர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
ஆடிப்பூரம் என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?
இத்தனை சிறப்புகள் பெற்ற ஆடிப்பூரம் நன்னாள் இந்த ஆண்டு 2024 ஆகஸ்ட் 07 ஆம் தேதி (ஆடி 22) செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. இந்நாளில் அம்பிகையின் அருளை பெற வழிபாட்டிற்கு பிறகு, பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை கூறுங்கள். இந்த மந்திரத்தை உச்சரித்தால், உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் நன்மை உண்டாகும்.
ஓம் ஐம் ஸ்ரீம் கலீம் லலிதா அம்பிகாயை நமகஇந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். 108 முறை உச்சரிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 27 முறையாவது இம்மந்திரத்தை கூற வேண்டும்.
இந்த மந்திரத்தை சொல்லும்போது, ஒரு தட்டில் கொஞ்சமாக பச்சரிசி யை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், பூ இதழ்கள் மற்றும் நெய் சேர்த்து கலந்து அட்சதை கலந்து எடுத்து கொள்ளுங்கள்.
இந்த அட்சதையை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து கொண்டு மந்திரத்தை கூறி, மற்றொரு கிண்ணத்தில் போட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் 27 முறை அல்லது 108 முறை செய்ய வேண்டும்.
இந்த மந்திரம் மட்டுமின்றி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தையும் உச்சரித்து அம்மனின் அருளை பெறலாம்.
“ஸ்ரீ சக்தி ஓம் சக்தி”இந்த மந்திரத்தை உங்களால் எத்தனை முறை உச்சரிக்க முடிகிறதோ அத்தனை முறை உச்சரிக்கலாம்.
ஆடிப்பூரம் வாழ்த்துக்கள் 2024.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |