Aadi Pooram Meaning in Tamil | What is Aadi Pooram in Tamil | Aadi Pooram History in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடிப்பூரம் என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.? (What is Aadi Pooram in Tamil, Aadi Pooram History in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஆடி மாதம் என்றாலே மிகவும் விசேஷமான நாள் ஆகும். ஆடி மாதத்தில் வரும் அணைத்து நாட்களுமே கடவுளை வழிபட உகந்த நாள். அப்படி ஆடி மாதத்தில் வரக்கூடிய சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றுதான் ஆடிப்பூரம்.
ஆடிப்பூரம் நாள் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் ஆடிப்பூரம் என்றால் என்ன.? இந்நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் ஆடிப்பூரம் பற்றிய விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
ஆடிப்பூரம் 2024 எப்போது.? தேதி மற்றும் நேரம் இதோ.!
ஆடிப்பூரம் என்றால் என்ன .? | ஆடிப்பூரம் வரலாறு:
உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப் பூரம் நாள். ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது கொண்டாடப்படுவது தான் ஆடிப்பூரம் விழா ஆகும். இது தேவிக்குரிய திருநாள் ஆகும். பூமா தேவியே ஆடிப் பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்று புராண கதைகள் கூறுகின்றன. அதாவது, ஆண்டாள் அவதரித்த நாள் ஆடிப்பூரமாக கொண்டாடப்படுகிறது. உலகத்தை காக்க இரட்சிக்கும் அம்பாளுக்கு ஆடிப்பூரம் அன்று மஞ்சள் காப்பு, சந்தன காப்பு மற்றும் குங்கும காப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடத்த ப்படும். இந்நாளில் பெரும் விசேஷமாக கொண்டாடப்படுவது அம்பாளுக்கு நடத்தப்படும் வளைகாப்பு விழா தான்.ஆடி மாதம் என்பது தட்சிணாயன தொடக்க காலம் என்பார்கள். அதாவது, சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயனம் என்று கூறுகின்றனர். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன், தற்போது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம் இது என்பதால், சிவபெருமானின் பக்கமாக வீற்றிருக்கும் அம்பிகையை வழிபட உகந்த மாதம் ஆடி மாதம் என்கிறார்கள். தாய்மை அடைந்த பெண்ணை மகிழ்விக்கும் வகையில், அப்பெண்ணுக்கு எப்படி வளைகாப்பு நடத்தப்படுகிறதோ, அதேபோன்று உலகத்தை காக்கும் அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தி மகிழ்விக்கிறார்கள்.
கோவில்களில் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபாடு செய்து, அதனை பெண்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். அம்மனின் வளையல்களை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு சகல விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூர நாளில்தான் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் துளசி மாடத்தில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. ஆடிப்பூரம் திருநாள் ஆனது, ஸ்ரீ வில்லிப்புத்தூரார் ஆண்டாள் திருக்கோவிலில் மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் என்பதால், இந்த கோவிலில் ஆடிப்பூரம் விழா 10 நாட்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆண்டாளை தரிசித்தால் அனைத்து நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
அனைத்து அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வீட்டில் ஆடிப்பூரம் பூஜை செய்வது எப்படி.?
சில இடங்களில் ஆடிப்பூரம் திருவிழா முளைப்பாரி திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, அவரவர் வீடுகளில் நவதானியங்கள் விதைத்து முளைப்பாரியை தயார் செய்கிறார்கள். ஆடிப்பூரம் அன்று அது அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகிறது. முளைப்பாரி எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறதோ, அந்த அளவிற்கு அந்த வருடம் செழிப்பதானதாக இருக்கும் என்பது ஐதீகம்.
எனவே, ஆடிப்பூரம் தினத்தன்று ஸ்ரீவில்லிப்பூத்தூர் ஆண்டாளையும், அம்பிகையையும் தரிசித்து அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையலை வாங்கி அணிவித்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |