வீட்டில் ஆடிப்பூரம் பூஜை செய்வது எப்படி.?

Advertisement

Aadi Pooram Pooja in Tamil

ஆடி மாதம் அம்மனை வணங்குவதற்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். மற்ற மாதங்களை விட இம்மாதத்தில் அம்மனை சிறப்பித்து வணங்குவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். ஏனென்றால், இம்மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாக புராணக்கதைகளில் கூறப்படுகிறது. மேலும், இம்மாதத்தில் அம்மனுக்கு வளையல் வாங்கி பூஜை செய்தால் திருமணம் ஆண பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, இந்நாளில் அனைத்து அம்மன் கோவிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வளவு  சிறப்புமிக்க இந்நாளில் பெண்கள் வீட்டில் எவ்வாறு ஆடிப்பூரம் பூஜை செய்து அம்மனை வழிபடுவது என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.

ஆடிப் பூரத்தில் குழந்தை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

How To Make Aadi Pooram Pooja in Tamil:

 aadi pooram pooja at home in tamil

2024 ஆம் ஆண்டில் இம்மாதத்தில் ஆடி 22 ஆம் தேதி ஆடிப்பூரம் வருகிறது. இந்நாளில் அம்மனை வழிப்படுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

ஆடிப்பூரத்திற்கு முதல் நாளே வீடுகளையும் பூஜை அறைகளையும் சுத்தம் செய்து வைத்து விடுங்கள்.

ஆடிப்பூரத்தன்று, பூஜை அறையில் தரையில் ஒரு மரத்தால் ஆன பலகையை வைத்து கோலமிட்டு அலங்கரித்து கொள்ளுங்கள்.  பிறகு, வீட்டில் உள்ள அம்பிகை படங்கள், அம்மன் படங்கள் தனியே எடுத்து அப்பலகையில் வைத்து, அப்படங்களுக்கு பூக்களை கொண்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

 how to make aadi pooram pooja in tamil

குறிப்பாக ரோஜா, தாமரை மற்றும் துளசியினை வைத்து அலங்கரித்து கொள்ளுங்கள். முக்கியமாக அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து விடுங்கள்.

அடுத்ததாக, அம்மனுக்கு இனிப்பு பொங்கல் செய்து படையல் இட்டு அம்மனை மனதார வேண்டி கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம், அம்மன் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமண வரனும், சுமங்கலி பெண்களுக்கு கணவரின் ஆயுளையும் நீட்டித்து அருள் புரிவாள்.

செல்வம் பெருக ஆடி 18 அன்று இந்த பொருட்களை மறக்காமல் பூஜை அறையில் வைய்யுங்கள்.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement