ஆடி பூரம் வழிபாடு செய்தால் திருமணம் கை கூடி வரும்..

Advertisement

ஆடி பூரம் என்றால் என்ன.?

ஆடி மாதத்தில் சிறப்பாக கருதப்படுவது ஆடி பூரம் தான். இவை தமிழகர்களுக்கு முக்கியமான பண்டிகையாக பார்க்கப்படுகிறது. ஆண்டாளின் பிறந்த நாளை தான் ஆடிப்பூரமாக கொண்டாடுகிறோம். 27 நட்சத்திரங்களில் ஒன்றாக ஆடி பூரத்தை கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் நாம் ஆண்டாளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க..

ஆடிப்பூரம் என்றால் என்ன.?

ஆடிப்பூரம் பண்டிகை பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது அம்மனை நினைத்து வழிபடுவது. இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்த நாளாக புராணங்கள் கூறுகிறது. மக்களை காப்பதற்கு அம்மன் சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில் தான் தவத்தை ஆரம்பிப்பார்கள் என்று புராணங்கள் கூறுகின்றது.

ஆடிப் பூரத்தில் குழந்தை வரன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

திருமண தடை நீங்க:

திருமண தடை நீங்க

ஆடி பூரம் அன்று வீட்டில் வழிபாடு செய்து திருமண தடைகளை எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்கள் வீட்டில் காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன், கருமாரியம்மன், அங்காள பரமேஸ்வரி, ஆண்டாள் போன்ற எந்த வகையான அம்மன் படங்களையும் எடுத்து கொள்ளவும்.

அம்மன் படத்தை துடைத்து விட்டு மஞ்சள் மற்றும் பொட்டு வைக்க வேண்டும். பிறகு வாசனை நிறைந்த மலர்களால் மாலை அணிவிக்க வேண்டும். மஞ்சள் நிற நூலில் வளையல்களை மாலையாக கோர்த்து  அதனையும் அம்மன் படத்திற்கு அணிவிக்க வேண்டும்.

படத்திற்கு முன்னாள் இரண்டு நெய் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். உங்களின் வேண்டுதல்களை மனதார நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அம்மனுக்கு உரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். கடவுளுக்கு நெய் வேத்தியமாக சர்க்கரை நிறைந்த பால் அல்லது சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை படைத்தது வழிபடலாம். ஒரு தாம்பூலத்தில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வளையல் போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும். கடவுளை வெளிப்பட்டதும் கடவுளு படைத்த வளையல்களை அணிந்து கொள்ள வேண்டும்.

இப்படி வழிபாடு செய்வதினால் திருமண ஆகவில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு வரன்கள் கைகூடும். திருமணம் ஆனவர்களுக்கு கனவனின் ஆயுள் அதிகரிக்கும்.

ஆடி 18 அன்று பெண்கள் கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement