Aadi Pournami 2024 Date and Time in Tamil | ஆடி பௌர்ணமி 2024 எப்போது.?
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2024 ஆம் ஆண்டில் ஆடி பவுர்ணமி எப்போது வருகிறது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஆடி மாதம் அம்மனை வழிப்படுவதற்கு உகந்த நாள் மட்டுமின்றி, அனைத்து தெய்வங்களையும் வணங்க உகந்த நாள் ஆகும். ஆடி மாதத்தில் வரும் சிறப்பு நாட்களில் ஒன்று ஆடி பௌர்ணமி ஆகும். பௌர்ணமி என்றாலே, சிவன் வழிபாட்டிற்கும், திருமால் வழிபாட்டிற்கும், அம்மன் வழிபாட்டிற்கும் உகந்த நாள் ஆகும்.
ஆனால், ஆடி பௌர்ணமி எல்லா தெய்வத்தையும் வழிபட உகந்த நாள் ஆகும். இந்நாளில், கடவுளை வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான நற்பலன்களும் கிட்டும். எனவே, இந்த ஆண்டு ஆடி பௌர்ணமி 2024 தேதி மற்றும் நேரம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆடி பௌர்ணமி வழிபாடு மற்றும் விரதம் இருக்கும் முறை..!
ஆடி பௌர்ணமி 2024 தேதி மற்றும் நேரம்:
- இந்த ஆண்டு ஆடி பௌர்ணமி ஜூலை 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. தமிழ் தேதிக்கு ஆடி 05 ஆம் தேதி வருகிறது. ஜூலை 20 ஆம் தேதி மாலை 06.10 PM மணிக்கு தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி மாலை 04.51 PM மணி வரை பௌர்ணமி திதி உள்ளது.
- ஜூலை 20 ஆம் தேதி மாலையே பௌர்ணமி திதி துவங்கினாலும், சூரிய உதய நேரத்தில் என்ன திதி இருக்கிறதோ அதுவே அன்றைய நாளுக்கான திதி என்பதால் ஜூலை 21 ஆம் தேதியே ஆடி பௌர்ணமியாக கொண்டாடப்படுகிறது. எனவே, ஜூலை 21 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று ஆடி பௌர்ணமி வழிபாடு/பூஜை போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
திருவண்ணாமலை கிரிவலம் செய்ய உகந்த நேரம்:
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் ஜூலை 20 ஆம் தேதி மாலை 06 மணிக்கு மேல் கிரிவலத்தை தொடங்கி மறுநாள் ஜூலை 21 ஆம் தேதி மாலை 05.20 PM மணிக்கு முன்பாக கிரிவலத்தை முடிக்க வேண்டும்.
ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?
ஆடி பௌர்ணமி அன்று நல்ல நேரம் எப்போது.?
காலை : 07.45 AM முதல் 08.45 AM
மாலை : 03.15 PM முதல் 04.15 PM
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |