Aadi Pournami Valipadu in Tamil | ஆடி பௌர்ணமி வழிபாடு
ஆடிமாதம் வந்து விட்டாலே அனைத்து நாட்களும் சிறப்பான நாட்கள் தான். இம்மாதத்தில் ஊரெங்கும் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் கலைகட்டும். குறிப்பாக அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் விஷேசமாகத்தான் இருக்கும். ஆடி மாதம் அம்மனை வழிப்படுவதற்கு உகந்த நாள் மட்டுமின்றி, அனைத்து தெய்வங்களையும் வணங்க உகந்த நாள் ஆகும்.
ஆடி மாதத்தில் வரும் சிறப்பு நாட்களில் ஒன்று ஆடி பௌர்ணமி ஆகும். பௌர்ணமி என்றாலே, சிவன் வழிபாட்டிற்கும், திருமால் வழிபாட்டிற்கும், அம்மன் வழிபாட்டிற்கும் உகந்த நாள் ஆகும். ஆடி பௌர்ணமி வழிபாடு செய்வதன் மூலம் அணைத்து விதமான நன்மைகளும் நம்மை வந்து சேரும். எனவே, சக்தி வாய்ந்த நாளான ஆடி பௌர்ணமி அன்று எப்படி வழிபட வேண்டும்.? எப்படி விரதம் இருக்க வேண்டும்.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
ஆடி பௌர்ணமி வழிப்பாட்டு முறை:
- ஆடி பௌர்ணமி அனைத்து கடவுள்களையும் வழிபட உகந்த நாளாக இருப்பதால், அன்றைய தினத்தில் அனைத்து கடவுள்களையும் வழிபாடு செய்யலாம்.
- ஆடி பௌர்ணமி அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமி திதியில் விரதம் இருந்து சிவ பெருமானையும், அம்மனையும் வழிபடுவதால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- இந்நாளில், சிவன் கோவில்களில் சோடஷ வடிவத்தில் யாகக் குண்டம் அமைத்து சிறப்பு யாகங்கள் நடத்துவார்கள். விநாயகப் பெருமானின் 16 வடிவங்களில் ஒன்று சோஷ வடிவமாகும். எனவே, ஆடி பெளர்ணமியில் சிவனுடன், விநாயகரையும் சேர்த்து வழிப்படுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
- ஆடி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து வழிபட வேண்டும். மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும் என்பது ஐதீகம். மேலும், வாழ்வில் நன்மை உண்டாகும். சிவபெருமானுக்கு நார்த்தம் பழம் சாதமும் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
- அதேபோல், அன்றைய தினத்தில் வீட்டில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அம்மன் கோவில்களுக்கு சென்று அம்மனுக்கு பூ, புடவை, மாலை அணிவித்து பாலாபிஷேகம், பழங்கள் கலந்த நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். குறிப்பாக,மஞ்சள் அல்லது சிகப்பு நிற புடவை வாங்கி தருவது இன்னும் சிறந்தது.
- ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமியானது உத்திராட நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும். ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வதும் சிறப்பாகும். திருமாலை வழிப்படுவதன் மூலம் குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் மற்றும் பதவி உயர்வும் கிடைக்கும்.
- பொதுவாக பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.
- இவ்வாறு வழிபாடு செய்தால் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
ஆடி பௌர்ணமி விரதம் இருக்கும் முறை:
ஆடி பௌர்ணமி அம்மனுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். ஆடி பௌர்ணமி அன்று குளித்து விட்டு அம்மனுக்கு விளக்கேற்றி, அம்மன் பாடல்களை துதிக்க வேண்டும். பகலா முழுவதும் உணவு உண்ணாமல் இருந்து, மாலையில் வீட்டில் அல்லது கோவில்களில் வழிபாடுமேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். விரதத்தை முடிக்கும்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்ய வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |