Aadi Velli Mantra in Tamil | ஆடி வெள்ளி மந்திரம்
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடி வெள்ளி அன்று சொல்லவேண்டிய மந்திரம் (Aadi Velli Mantra in Tamil) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆடி மாதத்தில் வரும் அணைத்து நாட்களும் விசேஷமான நாட்கள் தான். ஆடி மாதம் ஆன்மீக மாதம் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அணைத்து கடவுளையும் வணங்குவதற்கு உகந்த மாதம்.
குறிப்பாக அம்மனை வழிபடுவதற்கு சிறப்பான மாதம். இம்மாதம் முழுவதும் அணைத்து கோவில்களிலும் விசேஷமாக இருக்கும். ஆடி மாதத்தில் வரும் ஆடி வெள்ளி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் நாம் அம்மனை வழிபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். எனவே, அம்மனை அருளை பெற ஆடி வெள்ளி அன்று மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். அதனை பற்றி தான் இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் 2024.!
ஆடி வெள்ளி அன்று சொல்லவேண்டிய மந்திரம்:
ஓம் சக்தி மகா சக்தி, ஓம் சக்தி சிவ சக்தி, ஓம் சக்தி சர்வ சக்தி ஓம்.
இந்த மந்திரத்தை, ஆடி வெள்ளி அன்று காலையில் உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரித்தால் சகல விதமான சக்திகளும் உங்கள் உடம்பிற்குள் நுழையும், உங்கள் உடம்பை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கண் திருஷ்டியும் கெட்ட சக்தியும் விலகும்.
ஆடி வெள்ளி காலையில் எழுந்து குளித்து விட்டு, பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு, பூ பொட்டு வைத்து விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். வீட்டின் வாசலில் கோலமிட்டு நிலைவாசலில் மாயிலை தோரணம் கட்டி வேப்பிலை தோரணம் கட்டி அம்பாளை வணங்க வேண்டும்.
பூஜை செய்யும் வேளையில் மேலே கூறியுள்ள மந்திரத்தை உங்களால் முடிந்த அளவிற்கு உச்சரிக்க வேண்டும். மேலும், கோவிலுக்கு சென்றும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். அதுமட்டுமில்லாமல், ஆடி மாதம் முழுவதும் எப்போதெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம், இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
ஆடி வெள்ளிக்கிழமையில் இதை மட்டும் செய்யுங்கள்..! தீராத பிரச்சனையும் தீரும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |