ஆலமரம் கனவில் வந்தால்
இன்றைய பதிவில் ஆலமரம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்க போகிறோம். அனைவருக்குமே தூங்கும்போது கனவு வரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். ஒரு சிலருக்கு பயங்கரமான கனவு வரும்..இன்னும் ஒரு சிலருக்கு கண்ணை திறந்து பார்க்க முடியாத அளவிற்கு ஆழ்ந்த கனவு வரும். இன்னும் சிலர்க்கு தூக்கத்தில் இருந்து திடீரென விழிக்கும் அளவிற்கு கனவு வரும். பொதுவாக நமக்கு வரும் கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
அப்படி வரும் கனவுகளில் சில கனவுகள், நல்ல கனவாக இருக்கும். சில கனவுகள் கெட்ட கனவாக இருக்கும். நாம் நமக்கு வரும் கனவுகளை அந்த அளவுக்கு பெரிதாக எடுத்துகொள்ள மாட்டோம். ஆனால் ஆன்மீக சாஸ்திரத்தில், ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கின்றன. அந்த பலன்களை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ஆலமரம் மரம் கனவில் வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம் வாங்க..!
ஆலமரத்தை கனவில் கண்டால் :
உங்கள் கனவில் ஆலமரத்தை கண்டால் நீங்கள் செய்யும் தொழில் மேலும் அபிவிருத்தி ஆகும்.செல்வம் பெருகும் எனவும். உறவினர்களுக்கு உங்கள் மீது பாசம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆலமர விழுதுகளை கனவில் கண்டால்:
ஆலமர விழுதுகள் கனவில் கண்டால் வியாபாரம் தொடர்பான செய்லபாடுகளில் லாபம் உண்டாகும் என்பதை குறிக்கிறது. உங்கள் வேலையில் பெரிய திட்டத்தை கையாள இருப்பதையும், தொழில் சார்ந்த அனைத்திலும் உங்களுக்கு நற்பெயர் கிடைக்க இருப்பதையும் உணர்த்துகிறது.
முருங்கை மரம் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா..?
ஆலமர இலை கனவில் வந்தால்:
ஆலமர இலை உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி , மனஅமைதி மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றை குறிக்கிறது. சில சமையங்களில் ஆலமரம் கனவில் வருவதை தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதம் ஆகியவற்றை குறிக்கிறது.
ஆலமரத்தின் கீழ்நிற்பது போல் கனவு வந்தால்:
ஆலமரத்தின் அடர்த்தியான நிழல் பாதுகாப்பான மற்றும் உறுதியான இடத்தை குறிக்கலாம். ஆகையால் , நீங்கள் ஆலமரத்தை கனவில் காண்பது உங்களுக்கு பாதுகாப்பு மற்றும் உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்பதை குறிக்கிறது.
ஆலமர இலையை பறிப்பதுப்போல் கனவு கண்டால்:
வேப்ப இலையை இலையை பறிப்பதுப்போல் கனவு கண்டால் உங்களுக்கு உணவு பொருட்கள் அதிகமாக கிடைக்க இருப்பதையும் அதனை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
தரை முழுவதும் ஆலமர இலை இருப்பதுபோல் கனவு கண்டால்:
தரை முழுவதும் ஆலமர இலை இருப்பதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு செல்வவளம் பெருகும் என்று கூறப்படுகிறது. மேலும், நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் குறிக்கிறது.
ஆன்மீக ரீதியாக ஆலமரம் கனவில் வருவது:
ஆன்மீக ரீதியாக உங்கள் வாழ்வில் ஆலமரம் வருவது.ஆலமரம் ஆன்மீகம் மற்றும் ஞானத்தின் வளர்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை குறிக்கிறது. மேலும் உங்களின் வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகும் என்பதை குறிக்கிறது.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













