பச்சை கற்பூரம் போதும் கடன் தீர்ந்து வீட்டில் குறையாத பண வரவிற்கு..!

Advertisement

Aanmeega Pariharam

ஆன்மீகத்தில் சொல்லப்படும் பரிகாரம் என்ற சொல்லில் எண்ணற்ற அர்த்தங்கள் ஆனது நிறைந்து உள்ளது. ஏனென்றால் இதில் ஒவ்வொரு செயலுக்கும் பரிகாரங்கள் இருக்கிறது. ஆகையால் அத்தகைய பரிகாரங்களில் நமக்கு எது ஏற்றதாக இருக்கிறதோ அதையே நாம் கோவில் மற்றும் வீடு என பிரித்து பிரித்து செய்து வருகிறோம். இவ்வாறு பரிகாரங்கள் பல இருந்தாலும் கூட அதில் கடன் தீர மற்றும் பணம் சேர என இவை  இரண்டினையும் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். ஏனென்றால் இந்த இரண்டு பிரச்சனையும் பெரும்பாலான நபர்களுக்கு இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் இது தொடர்பான ஒரு பரிகாரத்தை தான் பார்க்கப்போகிறோம். அதாவது வீட்டில் உள்ள கடன் தொல்லை தீர்ந்து பணம் சேர என்ன செய்ய வேண்டும் என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

பச்சை கற்பூரம் பரிகாரம்:

கற்பூரம் என்பது அனைவரும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் நிறைய நபர்கள் பச்சை கற்ப்பூரத்தை தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். இவ்வாறு நாம் பயன்படுத்தும் பச்சை கற்பூரம் ஆனது ஆன்மீகத்தில் பரிகாரத்திற்கு என்று முக்கிய பங்கு வகிக்கிறது.

அதாவது பச்சை கற்பூரத்தை ஒரு சிறிய தட்டில் வைத்து அந்த தட்டை பூஜை அறையில் தென் மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் கஷ்டங்கள் குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

  1. பச்சை கற்பூரம்- சிறிதளவு
  2. கிராம்பு- 4
  3. ஏலக்காய்- 2
  4. சோம்பு- 1/2 தேக்கரண்டி

பச்சை கற்பூரம் பரிகாரம்

இப்போது ஒரு கிண்ணத்தில் மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் ஒன்று ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த கிண்ணத்தினை உங்களது பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இத்தகைய முறையில் பச்சை கற்பூரம் பரிகாரத்தை செய்ய வேண்டும்.

மேலும் இவற்றை எல்லாம் செய்து முடித்த பிறகு உங்களுடைய கடன் தொல்லை தீர்ந்து வீட்டில் பணம் சேர என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அத்தகைய முயற்சியினையும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

பண வரவை பலமடங்கு அள்ளித்தரும் பச்சை கற்பூரம்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement