பல முன்னேற்றங்களை தரும் ஆவணி மாதம் … ஆவணி மாத ராசிபலன்கள் 2023

Advertisement

ஆவணி மாத ராசி பலன் 2023 | Aavani maatha Rasi Palan 2023 | Aavani Month Rasi Palan 2023 in Tamil

Aavani Matha Rasi Palan: வணக்கம் ஆன்மீக அன்பர்களே..! 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிகளுக்கும் இந்த மாதம் முழுவதும் அவர்களுடைய ராசிக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுவோம். ஒவ்வொருவருக்கும் மனதில் இந்த மாதம் பிறந்துவிட்டது, இந்த மாதத்தில் நமக்கு என்னென்ன நடக்க போகிறதோ என்று மனதிலே பொலம்பிக் கொள்வார்கள். இந்த மாதம் நாம் மனதில் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறுமா? மாத ராசி பலன் (aavani matha rasi palan) படிக்க ஆர்வம் உள்ள ஆன்மீக அன்பர்களுக்கு இந்த பதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேஷ ராசி முதல் மீன ராசி வரை இந்த பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும் என்பதை பற்றி பதிவு செய்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு எந்த ராசியோ அதற்கான பலனை நீங்கள் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..!

இன்றைய நாள் எப்படி | இன்றைய நல்ல நேரம் தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்..! Indraya Naal Eppadi in Tamil

 

Sani Peyarchi 2023
தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2023

ஆவணி மாத ராசி பலன்கள் 2023 | Aavani maatha Rasi Palan 2023 | Aavani Month Rasi Palan 2023 in Tamil

மேஷம் ராசி ஆவணி மாத பலன் – Mesham Aavani maatha Rasi Palan

mesham today rasi palan

Aavani maatha Rasi Palan in Tamil – மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள்  மூலம் உதவிகள் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கான செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ வழிபட்டால் எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். விலையுர்ந்த பொருட்கள் வாங்கும் பாக்கியம் உள்ளது. குடும்பப் பெரியவர்களின் வார்த்தை படி நடந்தால் வெற்றிகள் நிச்சயம். உங்கள் துணைகள் உங்கள் கனவுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.

அலுவலகத்தில் அதிக பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றம், பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படும்.

வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். ஆனால், மறைமுகப் பிரச்னைகள் தோன்றிமறையும். கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில்  அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 17, 18, 24, 25, செப்: 1, 4, 5, 11, 14

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

ஆவணி மாத ரிஷபம் ராசி பலன் – Rishaba Rasi Palangal:-

rishaba rasi palangal ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றயை மாதம் பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும்.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 17, 20, 26, 27, 29, செப்: 4, 5, 7, 9, 12

சந்திராஷ்டம நாள்கள்: ஆக: 21, 22, 23

பரிகாரம்: துர்கை வழிபாடும், சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்வதும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

ஆவணி மாத மிதுனம் ராசி பலன் – Mithuna Rasi palan:

mithuna rasi palan மிதுன ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் மகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் மாதமாக அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சி களை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 19, 20, 21, 22, 23, 28 செப்: 1, 4, 5, 9, 15

சந்திராஷ்டம நாள்கள்: ஆக; 24, 25

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, மகிழ்ச்சி பெருகும்.

கடகம் ராசி பலன் – Kataka Rasi palan :

kataka rasi today கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சற்று இழுபறிக்குப் பின்னர் முடியும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். தாயுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கவும். எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 21, 22, 23, 24, 31 செப்: 1, 2, 5, 7

சந்திராஷ்டம நாள்கள்: ஆக: 26,27

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றுவதும், ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவதும் நன்மை தரும்.

சிம்மம் ராசி பலன் – Simmam Rasi palan :

simmam rasi palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வீடு, மனை வாங்கும் முயற்சி அனுகூலமாக முடியும். ஆனால், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கை யில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 18, 24, 25, 27 செப்: 3, 4, 5, 9, 10, 14

சந்திராஷ்டம நாள்கள்: ஆக 28, 29

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்தி மலரால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றி வழிபட பிரச்னைகள் குறையும்.

கன்னி ராசி பலன் – Kanni Rasi Palan :

kanni rasi palan today

கன்னி ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபர ணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு தாய்வழி உறவினர் கள் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத் தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால்,கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. மாதப் பிற்பகுதியில் ஓரளவு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 19, 20, 25, 27, 29, 30 செப்: 4, 5, 6, 7, 15

சந்திராஷ்டம நாள்கள்: ஆக: 31, செப் 1

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வதும், பிரதோஷத்தன்று நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நன்மைகளைத் தரும்.

இந்த வார ராசிபலன்

 

உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல்

துலாம் ராசி பலன் – Thulam Rasi Palan :

thulam rasi palan todayதுலாம் ராசிக்காரர்களுக்கு சிறந்த மாதமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வீடு, மனை வாங்கும் முயற்சியில் தற்போது ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். முக்கிய முடிவுகளைத் துணிச்சலுடன் எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 18, 21, 22, 23, 29, 30 செப்: 1, 5, 7, 9, 10,13

சந்திராஷ்டம நாள்கள்: செப் 2, 3

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும், ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் வழிபாடும் நலம் சேர்க்கும்.

விருச்சிகம் ராசி பலன் – Viruchigam Rasi Palan :

viruchigam rasi palan todayவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றயை மாதம் வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 19, 20, 24, 25, 31 செப்: 1, 2, 3, 11, 15

சந்திராஷ்டம நாள்கள்: செப்: 4, 5

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், மகான்களின் அதிஷ்டானங்களைத் தரிசிப்பதும் நன்மை தரும்.

தனுசு ராசி பலன் – Dhanusu Rasi Palan:

dhanusu rasi palanதனுச ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வசதி வாய்ப்புகளுக்குக் குறைவு இருக்காது. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாதப் பிற்பகுதியில் உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் விலகும். குடும்பத்தில் மனைவி மற்றும் மகளின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகைகளில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப் பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 18, 21, 22, 27, செப்: 2, 3, 4, 5, 13, 14

சந்திராஷ்டம நாள்கள்: செப்: 6,7

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட நன்மை ஏற்படும்.

மகர ராசி பலன்  – Magaram Rasi Palan:

magaram rasi palan

மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் பொறுமையுடன் இருக்கவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாத முற்பகுதியில் தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களிலுள்ள கோயில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலர் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்க ளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சற்று பொறுமையுடன் கையாளவேண்டியது அவசியம்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 17, 18, 19, 25, 28, 29 செப்: 4,5, 6, 13, 14

சந்திராஷ்டம நாள்கள்: செப்: 8, 9, 10

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

கும்பம் ராசி பலன்  – Kumbam Rasi Palan:

kumbam rasi palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனாலும், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தை அனுகூலமாக முடியும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அவர் கோபத்தில் எதுவும் கூறினாலும், மௌனமாக இருப்பது பிற்காலத்துக்கு நல்லது.

தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளை இந்த மாதத்தில் மேற்கொள்ளவேண்டாம். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆக: 19, 20, 21, 22, 23, 31 செப்: 1, 6, 7, 15

சந்திராஷ்டம நாள்கள்: செப்: 11, 12

பரிகாரம்: விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம் ராசி பலன்  – Meenam Rasi Palan avani maatha palan  :

meenam rasi palan today மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்ததாக காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கு இடையில் புரிதல் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். ஆடம்பரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆனாலும், சமாளித்துவிடுவீர்கள். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் : 21, 22, 23, 24, செப்டம்பர்: 2, 3, 9, 10 11

சந்திராஷ்டம நாள்கள்: ஆகஸ்ட்: 17, 18, செப்டம்பர் : 13, 14

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில் குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement