அபிஜித் முகூர்த்தம் 2022 | Abhijit Muhurtham in Tamil

Abhijit Nakshatra Time

அபிஜித் நட்சத்திரம் 2022 | Abhijit Nakshatra in Tamil

அபிஜித் முகூர்த்த நேரம்/ Abhijit Nakshatra Time: வீட்டில் நல்ல காரியங்கள் தொடங்குவதற்கு மிக முக்கியமான ஒன்று நல்ல நேரம். சில சமயத்தில் திதிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் சாதகமாக இல்லாத நேரத்தில் நல்ல காரியத்தினை அன்று செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அபிஜித் முகூர்த்தத்தை பயன்படுத்தலாம். அபிஜித் முகூர்த்தம் (abhijit muhurtham in tamil) என்பது எல்லா விதத்திலும் வெற்றியை தரக்கூடிய நட்சத்திரம். சூரியன் உச்சிகாலம் அடையும் நேரத்தினையே அபிஜித் முகூர்த்தம் என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். இந்த முகூர்த்தத்தில் அனைத்து நல்ல காரியங்களையும் செய்தால் நற்பலன் கிடைக்கும். சூரியனானது உச்சமடையும் நேரத்தில் நல்ல பிரகாசமாக இருக்கும்.

அந்த நேரத்தில் எந்த ஒரு செயலையும் செய்து வந்தால் பிரகாசமாக இருக்கும். அபிஜித் முகூர்த்த காலம் (abhijit nakshatra time) என்பது உச்சி காலமான பகல் பொழுதாக எண்ணக்கூடிய 11:45 முதல் 12:15 மணி வரையிலும் இதன் முகூர்த்த நேரமாகும். இந்த அபிஜித் முகூர்த்தத்திற்கு எந்த வித தோஷங்களும் கிடையாது. இந்த அபிஜித் முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாம், வாகனம் வாங்குவதற்கு பதிவு செய்யலாம், புதிதாக வாகனம் வாங்கலாம், புதிதாக நகை அணிகலன்கள் வாங்கவோ அல்லது செய்ய கொடுக்கலாம், வீடு மனை தொடர்பான பத்திர பதிவு செய்யலாம், உத்தியோகத்தில் இருக்கும் மேலதிகாரிகளை சந்திக்கலாம். இது போன்ற எதிர்காலம் சம்பந்தபட்ட அனைத்து நல்ல காரியங்களையும் இந்த அபிஜித் முகூர்த்தத்தில் தொடங்கினால் நல்ல வெற்றியை அடையலாம். சரி இப்போது இவ்வளவு நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரம் ஒவ்வொரு மாதத்திற்கும் எந்த நேரத்தில் ஆரம்பித்து எப்போது முடிவடைகிறது என்ற நேரத்தினை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

newஎந்த நட்சத்திரகாரர்கள் என்ன காயத்திரி மந்திரங்கள் சொல்லவேண்டும்

அபிஜித் முகூர்த்த நேரம்:

Abhijit Nakshatra Time | அபிஜித் முகூர்த்த நேரம்
மாதம் ஆரம்ப நேரம் முடிவடையும் நேரம் 
04.01.2022 (செவ்வாய்க்கிழமை)05:34 PM 04.01.2022  (12:23 PM) 
31.01.2022 (திங்கட்கிழமை) 04:33 PM 31.01.2022 (11:24 PM)
28.02.2022 (திங்கட்கிழமை) 01:29 AM 28.02.2022 (08:31 AM)
27.03.2022 (ஞாயிற்றுக்கிழமை)07:50 AM  27.03.2022 (03:03 PM)
23.04.2022 (சனிக்கிழமை) 01:12 PM 23.04.2022 (08:25 PM)
20.05.2022 (வெள்ளிக்கிழமை)07:46 PM 21.05.2022 (சனிக்கிழமை) 02:47 AM  
17.06.2022 (வெள்ளிக்கிழமை)04:34 am 17.06.2022 (11:22 AM) 
14.07.2022 (வியாழக்கிழமை)03:02 PM 14.07.2022 ( 09:42 PM)
11.08.2022 (வியாழக்கிழமை)01:35 AM11.08.2022 (08:17 AM)
07.09.2022 (புதன்கிழமை) 10:33 AM07.09.2022 (05:27 PM)
04.10.2022 (செவ்வாய்க்கிழமை)05:15 PM05.10.2022 (வியாழக்கிழமை)(12:21 AM)
31.10.2022 (திங்கட்கிழமை) 10:38 PM01.11.2022 (செவ்வாய்க்கிழமை) 05:46 AM
28.11.2022 (திங்கட்கிழமை)05:00 AM28.11.2022 (11:57 AM)
25.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) 02:04 PM25.12.2022 (08:46 PM)

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்