அச்சம் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா…பாடல்
இன்றைய பதிவில் அச்சம் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா…பாடல் வரிகள் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக, முற்காலத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு கடவுளையும் போற்றி வழிபடும் வகையில் பல்வேறு வகையான பக்தி பாடல்களை எழுதி வணங்கி உள்ளார்கள். அவ்வாறு அவர்கள் இயற்றிய ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு கடவுளின் சிறப்பும் இருக்கும்.ஐயன் ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு பெயர்களும் உள்ளது. மணிகண்டன், பூதநாதன், பூலோகநாதன்தர், மசாஸ்தாஎருமேலிவாசன், அரிகரசுதன், அரிகரன், கலியுகவரதன்கருணாசாகர் மற்றும் லட்சுமண பிராணதத்தா இதுபோன்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
மேலும், ஒவ்வொரு ஐயப்பன் பக்தரும் கார்த்திகை மாத தொடக்கத்தில் ஐயப்பனுக்கு மாலை போட்டு 1 மண்டலம் விரதம் இருந்து மார்கழி மாத கடைசியில் சபரிமலைக்கு செல்வார்கள். இவர்கள் விரதம் இருக்கும் ஒவ்வொரு நாளும் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். ஏனெற்றால் ஐயப்பன் அந்த அளவிற்கு சக்தி உடையவன். ஆகவே இன்றைய பதிவில் அச்சம் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா…பாடல் வரிகள் பாடல் வரிகள் பற்றி பார்க்கலாம் வாங்க…
அச்சம் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா…பாடல் வரிகள்:

அச்சம் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா…
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா…..
சாமி பொன்னைய்யப்பா சரணம் பொன்னைய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா…
அச்சம் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா…
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா…..
இச்சை கொண்டேன் உந்தன் முன்னே ஈஷ்வர மைந்தா
பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா
சாமி பொன்னைய்யப்பா சரணம் பொன்னைய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா….
ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா
பார்வதியால் அகமகிழும் பாலகனே வா
எருமேலே வீற்றிருக்கும் இறைவனே வா
தர்மஞான சாஸ்தாவே தயவுடனே நீ வா
மறைதேடும் சபரிமலை மன்னவனே நீ வா
குறைதீர்க்கும் குளத்துப்புழை பாலகனே வா
மன்னவனே மணிகண்டனே மகிழ்வுடனே வா
வான்புலிமேல் காட்சிதரும் வள்ளலே நீ வா
தேவர்களும் உனைப்பணிய காந்தமலையிலே நீ
ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே
காவலனே கண்ணாரக் கண்டோமே ஜோதிமலை
நாவார உனை அழைத்தோம் சுவாமியே
சரணம் ஐயப்பா
சாமி பொன்னைய்யப்பா சரணம் பொன்னைய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா…
ஐயப்பன் கன்னிமாரே கன்னிமாரே பாடல் வரிகள்..!
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













