Adagu Nagai Meetka Nalla Naal
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அடகு வைத்த நகையை மீட்க உகந்த நாள் (Adagu Vaitha Nagai Meetka Nalla Naal) எது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். கடன் வாங்கி அதனை அடைக்க முடியாமல் கஷ்டப்படும் நபர்களை போலவே, பெரும்பாலானவர்கள் அடகு வைத்த நகையை மீட்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அவசர தேவைக்காக வீட்டில் உள்ள நகையை அடகு வைத்து விடுகிறோம்.
ஆனால், அதனை மீட்க முடியாமல் வட்டி கட்டி சம்பாதிக்கும் பணம் எல்லாம் வீணாக போகிறது. அதுமட்டுமில்லாமல், பெரும்பாலானவர்கள் அடகு வைத்த நகைக்கு வட்டி கட்ட முடியாமல் நகையை ஆசை ஆசையாக அதிக விலை கொடுத்து வாங்கிய நகையை இழந்து விடுகிறார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Adagu Nagai Meetka Nalla Naal பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்நாளில் அடகு வைத்த நகையை மீட்டீர்கள் என்றால் திரும்ப நகையை அடகு வைக்கும் சூழ்நிலை வராது.
நகை அடகு வைக்க உகந்த நாள் 2024
அடகு வைத்த நகையை மீட்க உகந்த நாள்:
கிருத்திகை, கேட்டை மற்றும் பூராடம் நட்சத்திரங்கள் வரும் நாளில் அடகு வைத்த நகையை மீட்கலாம். இந்த நாட்களில் அடகு நகையை திருப்பினீர்கள் என்றால் மீண்டும் நகை அடகு வைக்கும் சூழ்நிலை வராது. மேலும், அடகு வைத்த நகையை மீட்க சிறந்த நாளாக தேய்பிறை அஷ்டமி உள்ளது. இந்நாளிலும் அடகு வைத்த நகையை மீட்கலாம்.அதேசமயம், அடகு வைத்த நகையை மீட்க வேண்டுமென்றால் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபட வேண்டும்.
அடகு வைத்த நகையை மீட்க மட்டுமின்றி, பணப்பிரச்சனை தீர, தடைகள் விலக மற்றும் கடன் தீர இதுபோன்ற பிரச்சனை எதுவாயினும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு செய்வதன் மூலம் அணைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |