வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அடி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்

Updated On: November 24, 2025 6:00 PM
Follow Us:
adipathu pol kanavu kandal
---Advertisement---
Advertisement

Adi Vanguvathu Pol Kanavu Kandal

மக்கள் இரவில் பலமுறை கனவு காண்பார்கள், ஆனால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. சிலர் காணும் கனவுகள் உண்மையில் நடக்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் கனவில் காணும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொன்றை குறிக்கும். அது சுப நிகழ்ச்சி அல்லது ஆபத்தாக கூட அமையும், அது உங்கள் கனவில் வரும் பொருளை பொறுத்து அமையும். நாம் விடியற்காலையில் காண கூடிய கனவானது பலிக்கும் என்று கூறுவார்கள். அதனால் நாம் கண்ட கனவிற்கு என்னென்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கனவுகளை காண்பார்கள். அதில் ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு பலனை கொடுக்கும். இந்த பதிவில் அடி வாங்குவது போல கனவு கண்டால் என்ன பலன் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

அடி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

அனைத்து கனவிற்கான கனவு பலன்கள் இதோ.! | All Kanavu Palangal in Tamil

அடி வாங்குவது போல கனவு கண்டால் உங்களுக்கு சில விஷயங்கள் பிடிக்காமல் இருக்கும், ஆனால் அதனை ஏற்று கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. சில விஷயங்கள் உங்களுக்கு பிடித்ததாக கூட இருக்கும், ஆனால் அதனை ஏற்று கொள்வதற்கு முன் நன்றாக யோசித்து செயல்பட வேண்டும்.

அடிப்பது போல் கனவு வந்தால்:

நீங்கள் யாராவது அடிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு ஆபத்து அல்லது அமைதி இல்லாமல் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

அடித்து கொள்பவரை பார்ப்பது போல கனவு:

நீங்கள் அடித்து கொள்பவரை பார்ப்பது போல கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறீர்கள் என்பதை குறிக்கிறது.

குத்து சண்டை கனவில் வந்தால்:

குத்து சண்டை கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையானது அதிர்ஷ்டமானதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

விலங்குகளை அடிப்பது போல கனவு வந்தால்:

விலங்குகளை அடிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு எதிரிகள் இருந்தால் அவர்களை சமாளித்து உங்கள் செயல்களில் வெற்றியை அடைவீர்கள் என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.

விலங்குகளை அடித்து கொள்வது போல கனவு கண்டால்:

விலங்குகளை அடித்து கொள்வது போல கனவு கண்டால் நீங்கள் தினமும் யாருடையவது சண்டை போட்டு கொண்டிருப்பீர்கள். இந்த சண்டைகள் மூலம் நீங்கள் தான் வெற்றியை அடைவீர்கள்.

கீழே விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now