அடுத்த ஜென்மம் பற்றி அறிய
ஒவ்வொரு மனிதரின் கருத்தும் மாறுபட்டதாக இருக்கும். முன் ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை, இந்த ஜென்மத்தில் இவ்வளவு கஷ்டங்களை பார்க்கிறேன் என்று புலம்புவார்கள். ஏழு ஜென்மம் இருக்கின்றது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கு இந்த ஜென்மமே வாழ முடியல, இதுல இன்னும் ஏழு ஜென்மமா என்று கவலை அடைவார்கள்.
நாம் அடுத்த ஜென்மத்தில் நாம் என்னவாக பிறப்போம் என்று யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அது போல் நீங்கள் முன்ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்திருப்பீர்கள் என்பதை தெரிந்துகொள்வோமா
பிற்பிறவி பற்றி அறிய:
ஒருவர் பிறந்த தேதி மற்றும் நேரம் வைத்து தான் ஜாதகம் எழுதப்படுகிறது. இந்த ஜாதகத்தை வைத்து ஒருவருடைய முற்பிறவி மற்றும் பிற்பிறவியை அறிந்து கொள்ள முடியும். அதனால் இந்த பதிவில் அடுத்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியை வைத்து அவர் அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பார் என்பதை அறிய முடியும். ஏழு ஜென்மத்தில் அணு ஜென்மம், கிரி ஜென்மம், புனர் ஜென்மம் என்பது இருக்கிறது.
பொதுவாக 12-ம் இடத்தில் கேது இருந்தால் அவர்களுக்கு மறுபிறவி கிடையாத. மோட்ச ஸ்தானத்தில் மோட்சக் காரகன் இருந்தால் மறுபிறவிக் கடலை நீந்தி மோட்சத்தை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
பிறந்த தேதி வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி?
மேலும் 12-ம் இடத்தில் கேது இருந்தாலோ அல்லது 12க்குரியவன் 12ம் இடத்திலேயே இருந்தாலும் மறுபிறவி இல்லையாம்.
5-ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. இந்த 5-ம் இடத்தை வைத்து முற்பிறவி மற்றும் பிற்பிறவியை பற்றி அறிந்து கொள்ளலாம்.
லக்னா எந்த கிரகத்தில் இருக்கிறது, லக்னாபதியை எந்த கிரகம் பார்க்கிறது, லக்னாபதியின் பார்வை எந்த கிரகத்தின் மீது இருக்கிறது என்பதை கணித்து விட்டால் அவர்களுடைய பிற்பிறவியை கண்டுபிடித்து விடலாம்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |








