வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்திற்கு செல்லும் சூரியன்- குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம்..!

Updated On: April 8, 2023 9:20 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

 Sun Will Join Guru Aries So These Signs are Lucky in Tamil

குருபகவான் ஒரு வருடத்திற்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். அதாவது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற ஒரு வருடம் ஆகிறது. எனவே இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு குருவும் சூரியனும் மேஷ ராசியில் இணைகிறார்கள். குரு தனது நண்பன் சூரியனுடன் இருக்கும் போது இந்த ராசியில் சூரியன் பெரும். இந்த நிலையில் மேஷ ராசியில் குருவும் சூரியனும் சேர்வதால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்பெறுமாம். எனவே குரு மற்றும் சூரியன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் அந்த ராசிக்காரர்கள் யாரென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இரு கிரகங்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழிய போகிறது..

 

மீன ராசி:

மீனம் ராசி

மீன ராசியின் இரண்டாவது வீட்டில் சூரியனும் குருவும் இணைய போகிறார்கள். மீனத்தின் இரண்டாவது வீடு என்பது பேச்சு மற்றும் செழிப்புக்கான வீடு ஆகும். இதனால் மீன ராசிக்காரர்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். இந்நேரத்தில் உங்கள் பேச்சின் மூலம் மற்றவர்களை கவர்வீர்கள். மேலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் செல்வம் பெருகுதல் என அதிர்ஷ்டங்கள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல், நீண்ட நாட்கள் தடைபட்டு இருந்த பணமும் கைக்கு வந்து சேரும்.

கடக ராசி:

கடக ராசி

கடக ராசியின் 10 -வது  வீட்டில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கை இருப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரம் மற்றும் தொழில் சாதகமாக இருக்கும். இந்நேரத்தில் கடக ராசிக்காரர்கள் வேலைவாய்ப்புகளை பெறலாம். மேலும், வேலை செய்பவர்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை பெறுவார்கள் மற்றும் வியாபாரம் செய்வபவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தை பெறலாம்.

சிம்ம ராசி:

சிம்ம ராசி

சிம்ம ராசியின் 9 -வது வீட்டில் சூரியன் குரு சேர்க்கை நிகழ இருக்கிறது. இதனால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றியையும் செழிப்பையும் பெறுவார்கள். சூரியன் சிம்மத்தை ஆளும் கிரகம். எனவே சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை தருவார். இக்காலம் வெளி நாடுகள் செல்பவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. மேலும் இந்த நேரத்தில் தந்தை உடனான உங்கள் உறவு மிகவும் நன்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

திடீரென்று இணையும் 4 கிரங்களின் சேர்க்கையால் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் கவனமாக இருக்கனுமாம்..! அப்போ உங்க ராசி என்ன..?

மேஷ ராசி:

மேஷ ராசி

சூரியனும் வியாழனும் 12 ஆண்டுகளுக்கு பிறகு மேஷ ராசியில் இணைய போகிறார்கள். சூரியன் மற்றும் குரு இரண்டுமே நெருப்பு உறுப்புகளின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் மேஷ ராசியினருக்கு ஆற்றல் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி மேஷ ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலையில் அதிகாரிகளின் மனதை வெல்வார்கள். இந்நேரத்தில் மேஷராசியினருக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேலும் பணியிடத்தில் நல்ல பதவி உயர்வு மட்டும் செல்வாக்கை பெறுவார்கள் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

மிதுன ராசி:

மிதுன ராசி

மிதுன ராசியின் 11 -ஆம் வீட்டில் சூரியன் குருவின் சேர்க்கை நடக்க உள்ளது. இதனால் மிதுன ராசிக்காரர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். 5-வது வீடு தொழிலில் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை கொண்டுள்ளது. மேலும் உடன் பிறந்தவர்களிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எனவே எல்லாவகையிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மையே நடக்கும் என்று கூறப்படுகிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now